LSG vs GT, Lucknow Super Giants vs Gujarat Titans IPL 2024 Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் ராகுல் களமிறங்கினர். டிகாக் ஒரு சிக்சர் மட்டும் அடித்து அவுட் ஆனார். அவர் உமேஷ் பந்தில் நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய படிக்கல் 7 ரன்களில் அவுட் ஆனார். அவர் உமேஷ் பந்தில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டாய்னிஸ். இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 91 ஆக இருந்தப்போது, ராகுல் 33 ரன்களில் அவுட் ஆனார். அவர் தர்ஷன் பந்தில் தெவாதியாவிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடி வந்த ஸ்டாய்னிஸ் அரை சதம் அடித்தார். இருப்பினும் ஸ்டாய்னிஸ் 58 ரன்களில் அவுட் ஆனார். அவர் தர்ஷன் பந்தில் ஷரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த படோனி 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அவர் ரஷித் கான் பந்தில் உமேஷிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்டியா 2 ரன்கள் எடுத்திருந்தப்போது லக்னோ அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பூரன் 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. கில் 19 ரன்களில் யாஷ் பந்தில் போல்டானார். அடுத்து வந்த வில்லியம்சன் ஒரு ரன்னிலும், ஷரத் 2 ரன்களிலும் நடையைக் கட்டினர். இதற்கிடையில் சாய் சுதர்சன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சற்று நிதானம் காட்டிய விஜய் சங்கர் 17 ரன்களிலும், தர்ஷன் 12 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்ததாக ராகுல் தெவாதியா களமிறங்கி ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். இதற்கிடையில் களமிறங்கிய ரஷீத் கான் டக் ஆனார். உமேஷ் 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த அகமது 4 ரன்களில் அவுட் ஆனார். தெவாதியா மீண்டும் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். இருப்பினும் 30 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
குஜராத் அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் யாஷ் தாக்கூர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பாண்டியா 3 விக்கெட்களையும், நவீன் மற்றும் ரவி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்/ கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கேப்டன்), ஷரத் பி.ஆர் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாதியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா
இதுவரை ஆடிய 3 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மறுபுறம், சும்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 4 ஆட்டங்களில் இரண்டு வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரையில், குஜராத் அணி லக்னோவுக்கு எதிராக 100 சதவீத வெற்றி என்கிற சாதனையை வைத்துள்ளது. அதனைத் தொடரவே அந்த அணி நினைக்கும். அதற்கு முட்டுக்கட்டை போட்டி குஜராத் அணிக்கு எதிராக முதல் வெற்றி பதிவு செய்ய லக்னோ போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குஜராத் Vs லக்னோ நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 4 ஆட்டங்களில் குஜராத் 4ல் வெற்றி பெற்றுள்ளது, லக்னோ அணி ஒரு முறை கூட வென்றதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.