Advertisment

LSG vs KKR Live score IPL 2024: 7 சிக்ஸர், 6 பவுண்டரி.. 81 ரன்கள் குவித்த நரேன்; 'லக்' இல்லா லக்னோ: முதல் இடத்தில் கொல்கத்தா!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய (மே5,2024) இரவு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை கொல்கத்தா ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
LSG vs KKR Live score IPL 2024 54 match Lucknow Super Giants vs Kolkata Knight Riders scorecard updates in tamil

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, கொல்கத்தா அணியிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Lucknow Super Giants | Kolkata Knight Riders: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 54வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா பேட்டிங்

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய (மே, 5, 2024) ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

லக்னோ ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற லக்னோ, கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது.

கொல்கத்தா தரப்பில் பில் சால்ட், சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பில் சால்ட் 14 பந்துகளில் 32 ரன்கள் (1 சிக்ஸர், 5 பவுண்டரி) எடுத்து அவுட் ஆன நிலையில் மறுபுறம் சுனில் நரேன் அதிரடி காட்டினார்.

236 ரன்கள் குவிப்பு

அவர் 39 பந்துகளில் 7 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்களான அங்கிரிஷ் ரனுவன்ஷி, ஆண்ட்ரூ ரூசெல், ரிங்கு சிங், ஸ்ரேயாஷ் ஐயர், ராமன்தீப் சிங் ஆகியோர் தங்கள் பங்குக்கு முறையே 32, 12, 16, 23, 25 ரன்கள் குவித்தனர்.

வெங்கடேஷ் ஐயர் கடைசி வரை அவுட் ஆகாமல் 1 ரன்னில் களத்தில் நின்றார். கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.

அடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி களம் இறங்கியது.

லக்னோ ஏமாற்றம்

அந்த அணியின் கே.எல். ராகுல், அர்ஷின் குல்கர்னி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். அர்ஷின் குல்கர்னி 9 ரன்னில் ஏமாற்றிய நிலையில், கே.எல். ராகுலு் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து மார்கஸ் ஸ்டோனிக்ஸ் மட்டும் ஒரளவு நிலைத்து நின்று 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களான தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அர்டன் டர்மர், குர்னால் பாண்ட்யா, யத்வீர் சிங், ரவி பிஷோனி ஆகியோர் 5, 10, 15, 5, 7, 8, 2 என சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.

98 ரன்கள் வித்தியாசத்தில்..

நவீன் உல்-ஹக் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகாமலும் களத்தில் நின்றார். ஆக 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து லக்னோ 137 ரன்கள் எடுத்து 98 ரன்கள வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரூ ரூசெல் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்ட்ராக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

ஆட்ட நாயகன்

81 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் எடுத்த சுனில் நரேன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லக்னோ vs கொல்கத்தா

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது, லக்னோ 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

தற்போது புள்ளி பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆம் இடத்திலும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Lucknow Super Giants Kolkata Knight Riders IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment