Advertisment

LSG vs PBKS Highlights: பந்து வீச்சில் மிரட்டிய லக்னோ வெற்றி; பஞ்சாப் அதிர்ச்சி தோல்வி

பஞ்சாப்- லக்னோ இடையேயான போட்டியில், லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவானின் அரைசதம் வீணானது.

author-image
WebDesk
New Update
LSG vs PBKS Live Score IPL 2024 Match 11 Lucknow Super Giants vs Punjab Kings scorecard updates Lucknow in tamil

ஐ.பி.எல். 2024: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Lucknow Super Giants vs Punjab Kings IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த லக்னோ அணியில் குயிண்டன் டீகாக், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ராகுல் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த படிக்கல் 9 ரன்களுக்கு வெளியேறினார். 2 சிக்சர் அடித்த ஸ்டொயினிஸ் 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார்.

ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த குயிண்டன் டீகாக், 38 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் கேப்டனாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது.

அரைசதத்தை நெருங்கிய பூரன், 21 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் பதோனி 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய குணால் பாண்டிய அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவினார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. இறுதிவரை களத்தில் இருந்த குணால் பாண்டியா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணி தரப்பில், சாம் கரன் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், ரபாடா, ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் – ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இவர்க்ள இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால், பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் அரைசதம் கடந்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 102 ரன்களை எட்டியபோது அரைசதத்தை நெருங்கிய ஜானி பேர்ஸ்ட்டோ ஆட்டமிழந்தார். 29 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பிரப்சிம்ரான் அதிரடியாக 7 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தவான் அணியை வெற்றிப்பதைக்கு அழைத்துச்சென்ற நிலையில், 15 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 47 பந்துகளில் 68 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், அடுத்து வந்த மயங்க் யாதவ் ஓவரில் ஜிதேஷ் சர்மா வெளியேறினார். அடுத்துவந்த பிரப்சிம்ரன் சிங்-ம் 19 ரன்களில் வெளியேறினார். சற்று தடுமாறத்தை சந்தித்த பஞ்சாப் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த தவான் மோசின் கான் வீசிய 17-வது ஓவரில் 70 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனால் பஞ்சாப்பில் வெற்றி வாய்ப்பு குறைந்தது. தொடர்ந்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 41 ரன் தேவைப்பட்டன. நவீன் உல்-ஹக் பந்துவீசினார். இந்த ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன் மட்டும் கிடைத்தது. இதன் முடிவில் பஞ்சாப்  20 ஓவரில் 5 விக்கெட்டு இழப்புக்கு  178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் ஷிகர் தவானின் அதிரடி கைகொடுக்காமல் போனது. இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Lucknow Super Giants Punjab Kings IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment