Advertisment

LSG vs RCB Highlights: பூரன் அதிரடி; பெங்களூருவை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி

இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களுருவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

author-image
WebDesk
New Update
 Ipl 2023 | LSG vs RCB live Score | Lucknow vs Bangalore

Lucknow Super Giants vs Royal Challengers Bangalore Highlights in tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை)இரவு 7.30 மணிக்கு நடந்த 15வது ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதின.

Advertisment

பெங்களூர் அணி பேட்டிங்

பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டுபிளசிஸ் களமிறங்கினர். டுபிளசிஸ் ஒரு பக்கம் கம்பெனி கொடுக்க, பவர்ப்ளே-யில் அடித்து விளாசினார் விராட் கோலி. சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். அதேநேரம் விக்கெட் வீழ்த்த முடியாமல் லக்னோ அணி வீரர்கள் திணறினர். பெங்களூரு அணி 96 ரன்கள் எடுத்திருந்தப்போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அமித் மிஸ்ரா பந்தில் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலி 4 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசினார்.

அடுத்தாக டுபிளசிஸ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் லக்னோ பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கோலி அவுட் ஆனதற்கு பிறகு டுபிளசிஸ் அதிரடியை தொடங்கினார். பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினார். மறுபக்கம் விளையாடிய மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தார். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இருவரது விக்கெட்களையும் வீழ்த்த முடியாமல் லக்னோ பந்து வீச்சாளர்கள் திணறினர். பெங்களூரு அணி 200 ரன்களை கடந்த நிலையில், 20 ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் அவுட் ஆனார். அவர் மார்க் உட் பந்தில் போல்டானார். மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்சர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்ததாக தினேஷ் கார்த்திக் களமிறங்கி 1 ரன் அடித்த நிலையில், பெங்களூர் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளசிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 46 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

லக்னோ பேட்டிங்

லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மேயர்ஸ் மற்றும் ராகுல் களமிறங்கினர். இதில் மேயர்ஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரை சிராஜ் போல்டாக்கி அசத்தினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 9 ரன்களிலும், குருனால் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். இருவரது விக்கெட்டையும் பர்னல் வீழ்த்தினார். இதனால் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

மறுமுனையில் ஆடி வந்த ராகுல் நிதானம் காட்ட, அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடினார். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டாய்னிஸ் 65 ரன்களில் அவுட் ஆனார். 30 பந்துகளைச் சந்தித்த ஸ்டாய்னிஸ் கரண் சர்மா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 5 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்தார்.

அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கிய சிறிது நேரத்திலே ராகுல் 18 ரன்களில் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. அடுத்து ஆயுஷ் படோனி களமிறங்கி கம்பெனி கொடுக்க, பூரன் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த பூரன், லக்னோ அணி 189 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பூரன் 19 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். பூரன் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

அடுத்ததாக உனத்கட் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுண்டரி அடித்த படோனி அடுத்த பந்தில் அவுட் ஆனார். அவர் 30 ரன்களில் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். 19 ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் 1 ரன் கிடைக்க, அடுத்தப் பந்தில் மார்க் உட் அவுட் ஆனார். அடுத்து வந்த பிஷ்னோய் முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்தப் பந்தில் 1 ரன்னும் எடுத்தார். இதனால் ஸ்கோர் சமமானது. 5 ஆவது பந்தில் உனத்கட் அவுட் ஆனார். கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், அவேஷ் கான் லெக் பை மூலம் 1 ரன் சேர்க்க லக்னோ த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் சிராஜ் மற்றும் பர்னல் தலா 3 விக்கெட்களையும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Lucknow Super Giants Royal Challengers Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment