IPL 2024 | Lucknow Super Giants | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு லக்னோவில் தொடங்கும் 44-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs RR Live Score, IPL 2024
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல் ராகுல் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக டிகாக் மற்றும் ராகுல் களமிறங்கினர். டிகாக் 8 ரன்களில் வெளியேறினார். போல்ட் அவரை போல்டாக்கினார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அடுத்ததாக ராகுலுடன் தீபக் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். ராகுல் அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது. தீபக் ஹூடா அரை சதம் அடித்து அவுட் ஆனார். ஹூடா 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த பூரன் 11 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து படோனி களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ராகுல் 76 ரன்களில் அவுட் ஆனார். ராகுல் 48 பந்துகளைச் சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசியிருந்தார். அடுத்து க்ருனால் பாண்டியா களமிறங்கி 15 ரன்கள் எடுத்த நிலையில், லக்னோ அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. படோனி 18 ரன்களுடன் களத்தில் இருந்தார். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் 2 விக்கெட்களையும், போல்ட், ஆவேஷ் கான், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தலா 18 பந்துகளில் அவுட் ஆகினர். ஜெய்ஸ்வால் 24 ரன்களையும், பட்லர் 34 ரன்களையும் எடுத்தனர். அடுத்ததாக சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் விளையாடி நிலையில், பராக் 14 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சாம்சன் உடன் துருவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இருவரையும் வீழ்த்த முடியாமல் லக்னோ பவுலர்கள் திணறினார்.
சாம்சன் அரை சதம் விளாசி அசத்தினார். கடைசி நேரத்தில் துருவ்வும் அரை சதம் அடித்தார். ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்தது. சாம்சன் 33 பந்துகளில் 71 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். துருவ் 34 பந்துகளில் 52 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். லக்னோ தரப்பில் யாஷ், ஸ்டாய்னிஸ், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நடப்பு சீசனில் இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி, 3ல் தோல்வி என கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மறுபுறம், இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 7ல் வென்றுள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்டியலில் முதல் இடத்தில் வலுவான நிலையில் உள்ளது.
இந்த இரு அணிகளும் முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் களமிறங்க உள்ளன. ராஜஸ்தான் மும்பையையும், லக்னோ சென்னையையும் வீழ்த்தின. அதனால், தொடர் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் மல்லுக்கட்டுவார்கள். லக்னோவுக்கு உள்ளூர் சூழல் சாதகமாக உள்ள நிலையில், அதனை சமாளித்து வெற்றிக் கொடியை நாட்ட ராஜஸ்தான் நினைக்கும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு சொந்த மண்ணில் தங்கள் பலத்தை மீண்டுமொருமுறை நிரூபிக்க லக்னோ முயற்சிக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ 1-ல் வெற்றியும், ராஜஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.