10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, LSG vs SRH LIVE Cricket Score
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற ஐதராபாத் பவுலிங் - லக்னோ முதலில் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு மீச்செல் மார்ஷ் எய்டன் மார்க்ரனம் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய மீச்செல் மார்ஷ் அரைசதம் கடந்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தியது. அணியின் ஸ்கோர் 115 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது.
அரைசதம் கடந்த மீச்செல் மார்ஷ், 39 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன், 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்் 7 ரன்களில் வெளியேறிய நிலையில், 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பூரன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். ஆனால் அரைசதம் கடந்த மார்க்ரம் 38 பந்துகளில், 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பிறகு பதோனி, சமத் ஆகியோர் தலா 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அரைசதத்தை நெருங்கிய நிக்கோலஸ் பூரன், 26 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. ஆகாஷ் தீப் ஒரு பந்தில் சிக்சர் அடித்து 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். சன்ரைசஸ் அணி தரப்பில், மலிங்கா 2 விக்கெட்டுகளும், நித்தீஷ்குமார், ஹெர்ஷெல் பட்டேல், டுபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினது.
தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய அதர்வா, 9 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியில் அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த இஷான் கிஷன் 28 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அபிஷேக் சர்மா, 20 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த க்ளாசன் அதிரடியாக விளையாடி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய க்ளாசன், 28 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மெண்டீஸ் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார்.
18.2 ஓவர்களில் ஐதராபாத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு, 206 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் திக்வேஷ் 2 விக்கெட்டுகளும், ருக்கி, தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
ஐதராபாத்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா
இம்பாக்ட் பிளேயர்: முகமது ஷமி, அதர்வா டைடே, சச்சின் பேபி, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங்
லக்னோ: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, அவேஷ் கான், வில் ஓ'ஆர்கே
இம்பாக்ட் பிளேயர்: ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, மணிமாறன் சித்தார்த், ஷர்துல் தாக்கூர், டேவிட் மில்லர்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 போட்டிகளில் லக்னோ 4 முறையும், ஐதராபாத் ஒருமுறையும் வென்றுள்ளன. இந்த சீசனில் நடந்த ஆட்டத்தில் லக்னோ 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.