TNPL 2023 LKK vs CSG: சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் : கோவை அணிக்கு 2-வது வெற்றி

திண்டுக்கலில் இன்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதியது

திண்டுக்கலில் இன்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதியது

author-image
WebDesk
New Update
Lyca Kovai Kings vs Chepauk Super Gillies, 9th Match TNPL 2023 Tamil News

டி.என்.பி.எல் 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ்

Lyca Kovai Kings vs Chepauk Super Gillies, 9th Match TNPL 2023 Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் திண்டுக்கல் மைதானத்தில் மோதியது.

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஹரிஷ்குமார் 32 ரன்களும், உத்திரசாமி சசிதேவ் 23 ரன்களும் சந்தோஷ் ஷீவ் 14 ரன்களும், அபாரஜித் 12 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணி தரப்பில், யுத்தீஸ்வரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 127 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் சச்சின் 14 ரன்களிலும, அரைசதத்தை நெருங்கிய சுரேஷ்குமார் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து வெற்றியை தேடி கொடுத்தார்,

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: