Advertisment

TNPL 2023 LKK vs DGD: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது கோவை : இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குவாலிபையர் முதல் போட்டியில் கோவை திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதியது

author-image
WebDesk
New Update
Lyca Kovai Kings vs Dindigul Dragons, Qualifier 1  Tamil News

டி.என்.பி.எல் 2023: முதல் தகுதிச் சுற்று - லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதல்

Lyca Kovai Kings vs Dindigul Dragons, Qualifier 1  Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

Advertisment

இதில், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று (வெள்ளிகிழமை) சேலத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சச்சின் 46 பந்துகளில் 70 ரன்களும், முகுலெஷ் 27 பந்துகளில் 44 ரன்களும், சுரேஷ் குமார் 12 பந்துகளில் 26 ரன்களும் குவித்தனர். திண்டுக்கல் அணி தரப்பில், சுபோத் படி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 194 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. சரத்குமார் 26 பந்துகளில் 1 பவுண்டரி 8 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து அசத்தினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் திண்டுக்கல் அணி 30 ரன்கள் வித்தியாவத்தில் தோல்வியடைந்தது.

கோவை அணி தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளும், யுதீஷ்வரன், தாமரை கண்ணன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தோல்வியடைந்த திண்டுக்கல் அணி 2-வது குவாலிபையரில் விளையாட உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment