/tamil-ie/media/media_files/uploads/2018/04/dhoni-vs-kohli.jpg)
M.S.Dhoni, Virat Kohli, Important Game For RCB
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான மோதல், டோனி-கோலி இடையிலான பலப்பரீட்சையாக நடக்கிறது.
ஐபிஎல் - 2018 இன்று (ஏப்ரல் 25) நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை அணியின் கேப்டன் டோனிக்கும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலிக்கும் இடையிலான பலப்பரீட்சையாகவும் இது பார்க்கப்படுகிறது. புள்ளிகள் பட்டியலில் பின் தங்கியிருக்கும் பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டி மிக முக்கியமானது. சென்னை அணியைப் பொறுத்தவரை, பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற இந்த வெற்றி முக்கியம்!
பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் விதி இருக்கிறது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் கார்டை இங்கு காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.