Ramanathapuram News in Tamil: 2022-2023 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை மதுரை மண்டல அளவிலான போட்டிகள், ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை நடத்தி வருகிறது. இதில், மதுரை மண்டல அளவிலான கடற்கரை கையுந்து (Beach volleyball) விளையாட்டு போட்டிகள் அதியமான் கடற்கரையில் இன்று முதல் வருகிற மார்ச் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மதுரை தேனி, கரூர் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். 28 பிப். முதல் மார்ச் 1 வரை பள்ளி மாணவ மாணவிகளும், 2 மார்ச் முதல் 3 மார்ச் வரை கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் மார்ச்சை தலைமை தாங்கிய ராஜா KBM நாகேந்திர சேதுபதி போட்டிகளை தொடக்க வைத்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil