/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-25T182125.410.jpg)
மகேந்திர சிங் தோனி ட்விட்டரில், “புதிய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் செல்வதற்காக காத்திருக்க முடியவில்லை. அப்டேட்டுக்கு காத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
IPL 2024 | Mahendra Singh Dhoni | Chennai Super Kings | 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடர் மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்த போட்டியின் அட்டவணை பிப்.22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மார்ச் 22 முதல் தொடங்க உள்ள ஐ.பி.எல் 2024 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
10 அணிகள் மோதும் ஐ.பி.எல் 2024 தொடரில் 5 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் தங்கள் குழுவில் உள்ள மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை (சொந்த மைதானத்தில் மற்றும் வெளி மைதானத்தில் ஆட்டம்) மோதும்.
குஜராத் டைட்டன்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் மார்ச் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
New ‘role’ for Leo ?! 💛🦁 pic.twitter.com/AsjaLNZgvU
— Chennai Super Kings (@ChennaiIPL) March 4, 2024
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தோனி சூசகமாக அறிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், “திய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் செல்வதற்காக காத்திருக்க முடியவில்லை. அப்டேட்டுக்கு காத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி புதிய ரோலில் விளையாடும் போது, கேப்டன்ஷிப் ரவீந்திர ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரியவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.