Advertisment

ஆசிய சாம்பியன்ஷிப் கபடி அணியில் மணிந்தர் சிங் இல்லை: ரசிகர்கள் ஷாக்; பயிற்சிக்கு போகாதது காரணமா?

பி.கே.எல் போட்டியில் முன்னணி ரைடராக வலம் வந்த மனிந்தர் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி அணியில் இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Maninder Singh’s excluded Asian Kabaddi Championship team, reason in tamil

Reason behind exclusion of Maninder Singh’s from Asian Kabaddi Championship team Tamil News

Maninder Singh - Kabaddi player Tamil News: தென் கொரியாவின் பூசானில் நடைபெறும் 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அர்ஜுன் தேஷ்வால், பங்கஜ் மொஹிதே, அஸ்லாம் இனாம்தார், சச்சின் தன்வார், நவீன் குமார் போன்ற சிறந்த வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த அணியில் பர்தீப் நர்வால், தீபக் ஹூடா, அங்குஷ் போன்ற முக்கிய வீரர்கள் சேர்க்கப்படவில்லை. அதே சமயம், அணியில் இடம் பெறாத மனிந்தர் சிங்கின் பெயர்தான் இவை அனைத்திலும் மிகவும் ஆச்சரியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பிரீமியர் போட்டிக்கான அணியில் மனிந்தர் சிங் போன்ற முன்னணி ரைடர் இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

மனிந்தர் சிங் ஒரு ரைடர், எந்த சூழ்நிலையிலும் தனித்து நின்று போட்டிகளை வெல்லும் திறன் கொண்டவர். ப்ரோ கபடி லீக்கில் பெங்கால் வாரியர்ஸின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர். கடந்த சில சீசன்களாக அவர் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். 9வது சீசனில், மனிந்தர் சிங் தனது அணிக்காக 21 போட்டிகளில் விளையாடி 238 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார். இத்தகைய சூழ்நிலையில், மனிந்தரை நீக்கியது அதிர்ச்சியளிக்கும் முடிவாகக் கருதப்படுகிறது.

முகாமில் கலந்து கொள்ளவில்லை

அதேநேரம், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகளுக்காக மனிந்தர் சிங் முகாமுக்குச் செல்லவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்காக முகாமில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த அவர், ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் இடம் பெறாததற்கு காரணம். இந்திய கபடி அணியின் முகாம் பாட்னாவில் அமைக்கப்பட்டது.

publive-image

சஞ்சீவ் பல்யான், இ பாஸ்கரன், அஷன் குமார் ஆகியோர் தலைமையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் மனிந்தர் சிங் அதில் இடம்பெறவில்லை, மேலும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணமும் கூறப்படுகிறது. இருப்பினும், பர்தீப் நர்வால் உட்பட பல நட்சத்திரங்கள் இந்த முகாமில் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது, ஆனால் இது இருந்தபோதிலும், அவர்கள் அணியில் இடம் பெறவில்லை.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை தென் கொரியாவின் பூசானில் நடைபெறுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில், ரெய்டிங் பிரிவில் அர்ஜுன் தேஷ்வால், நவீன் குமார், சச்சின் தன்வார், அஸ்லாம் இனாம்தார், மற்றும் பவன் செஹ்ராவத் போன்ற வீரர்கள் உள்ளனர். மறுபுறம், நிதேஷ் குமார், பிரவேஷ் பைன்ஸ்வால், விஷால் பரத்வாஜ், சுர்ஜித் சிங், மற்றும் ஷுபம் ஷிண்டே போன்ற வீரர்கள் டிஃபெண்டர்களாக இடம் பெற்றுள்ளனர். தனது தலைமையின் கீழ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக பிகேஎல் பட்டத்தை வென்ற சுனில் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

ரைடர்கள்: அர்ஜுன் தேஷ்வால், நவீன் குமார், சச்சின் தன்வார், அஸ்லாம் இனாம்தார், மோஹித் கோயத் மற்றும் பவன் செஹ்ராவத்.

ஆல்-ரவுண்டர்: நிதின் ராவல்.

டிஃபெண்டர்கள்: சுனில் குமார், பிரவேஷ் பைன்ஸ்வால், நிதேஷ் குமார், சுர்ஜித் சிங், மற்றும் விஷால் பரத்வாஜ்.

காத்திருப்பு வீரர்கள்: விஜய் மாலிக் மற்றும் சுபம் ஷிண்டே.

கடைசியாக இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை ஈரானில் ஏற்பாடு செய்தபோது வென்றது. இதுவரை 10 முறை ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இது முதலில் 1980 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. மொத்தமாக எட்டு முறை இந்திய அணி வென்றுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Pro Kabaddi Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment