Advertisment

IND vs SA: கேப்டன் பவுமா-வுக்கு ஓய்வு... இளம் படையை களமிறக்கும் தென் ஆப்ரிக்கா!

டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருக்கும் ஐடன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா இல்லாத நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் அவரே கேப்டனாக செயல்பட உள்ளார்.

author-image
WebDesk
New Update
Many new faces in South Africa squads for India series tamil news

பட்டியலில் இருந்து விடுபட்ட அன்ரிச் நார்ட்ஜே மற்றும் வெய்ன் பார்னெல்ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு வருகின்றனர்.

India-vs-south-africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், டி20 தொடர் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து 17ம் தேதி முதல் ஒருநாள் தொடர் நடைபெறும். இதன் பின்னர், 26-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கும். 

Advertisment

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிப்பட்ட நிலையில், தற்போது இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த தொடரில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புகின்றனர். 

டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருக்கும் ஐடன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா இல்லாத நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் அவரே கேப்டனாக செயல்பட உள்ளார். 

இதேபோல், ஜெரால்ட் கோட்ஸி, மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் அந்தந்த உள்நாட்டு அணிகளுக்கான முதல் தர போட்டிகளில் பங்கேற்பதால், டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக கடைசி டி20 மற்றும் ஒருநாள் தொடர் முழுதுமாக பங்கேற்க மாட்டார்கள். 

இளம் படையை களமிறக்கும் தென் ஆப்பிரிக்கா

ஆல்-ரவுண்டர் மிஹ்லாலி மபோங்வானா, பேட்ஸ்மேன் டேவிட் பெடிங்காம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நாந்த்ரே பர்கர் போன்ற வீரர்கள் தங்களது அறிமுக போட்டியில் விளையாட உள்ளார்கள். மபோங்வானா ஒருநாள் தொடருக்கான அணியிலும், பெடிங்காம் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளார்கள். 28 வயதான நாந்த்ரே பர்கர், உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், மூன்று அணிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதேபோல் பேட்ஸ்மேன் வீரரான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது முதல் டெஸ்ட் அழைப்பைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

பட்டியலில் இருந்து விடுபட்ட அன்ரிச் நார்ட்ஜே மற்றும் வெய்ன் பார்னெல்ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு வருகின்றனர். லிசாட் வில்லியம்ஸ் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அவர் இடுப்பு வலி காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

தென் ஆப்பிரிக்கா டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்),ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி (1வது மற்றும் 2வது டி20), டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன் (1வது மற்றும் 2வது டி20), ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், லுங்கி என்கிடி (1வது மற்றும் 2வது டி20), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், நாந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மிஹ்லாலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டப்ரைஸ் ஷாம்வான்சி, டப்ரைஸ் ஷாம்வான்சி கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ செயின்ட் ரபாடா, மற்றும் கைல் வெர்ரின்னே

3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி*, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுற்றுப்பயணத்தின் ஒயிட்-பால் தொடர்களில் இருந்து ஓய்வு அளிக்குமாறு வாரியத்திடம் கோரிக்கை விடுத்தனர். முகமது ஷமி தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார் மற்றும் அவர் உடற்தகுதியை எட்டினால் தொடரில் களமாடுவார். 

போட்டி அட்டவணை

ஞாயிறு, 10 டிசம்பர் - முதலாவது டி20, டர்பன்

  

செவ்வாய், 12 டிசம்பர் - 2வது டி20, க்கெபெர்ஹா

  

வியாழன், 14 டிசம்பர் - 3வது டி20, ஜோகன்னஸ்பர்க்

  

ஞாயிறு, 17 டிசம்பர் - முதலாவது ஒருநாள் போட்டி, ஜோகன்னஸ்பர்க்

  

செவ்வாய், 19 டிசம்பர் - 2வது ஒருநாள் போட்டி, க்கெபெர்ஹா

  

வியாழன், 21 டிசம்பர் - 3வது ஒருநாள் போட்டி, பார்ல்

  

26 டிசம்பர் - 30 டிசம்பர் - முதலாவது டெஸ்ட், செஞ்சுரியன்

  

03 ஜனவரி - 07 ஜனவரி - 2வது டெஸ்ட், கேப் டவுன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment