ஐபிஎல் சாத்தியமே – விளம்பரதாரர்களின் வேகமும், விவேகமும்

சில நாட்களுக்கு முன்பு, ஒரு சிறந்த மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், அவர்கள் நிறுவனத்தின் எஸ்யுவி கார் ஒன்று, பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திற்குள் விறபனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. லாக்…

By: June 19, 2020, 1:17:56 PM

சில நாட்களுக்கு முன்பு, ஒரு சிறந்த மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், அவர்கள் நிறுவனத்தின் எஸ்யுவி கார் ஒன்று, பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திற்குள் விறபனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. லாக் டவுன் காரணமாக, விற்பனை தாமதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பல்வேறு நிறுவங்கள், தங்கள் பொருட்களை அதிகம் விற்பனை செய்யும் செப்டம்பர் – நவம்பர் காலக்கட்டம், முதன்முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) பிராண்டுகள் மற்றும் புதிய தயாரிப்புகளுக்கான அலைவரிசையுடன் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிவெளிச்சங்களும், ரசிகர் வெள்ளமும் நிறைந்த ஐபிஎல் திருவிழா எப்படியாவது இந்தாண்டு நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து M குழுமத்தின் வணிகத் தலைவர் (பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் நேரடி நிகழ்வுகள்) வினித் கார்னிக் பேசியுள்ளார்.

ஸ்ரீசாந்த் கம்பேக்; சச்சின் vs டிராவிட் – இன்றைய ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்

“இந்தியாவில் பண்டிகை காலங்களில் விளையாட்டு தொடங்குகிறது என்ற அனுமானத்துடன், புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்ய நிறுவனங்கள் விரும்பும். அவர்கள் அனைவருக்கும் ஒருவித மார்க்கெட்டிங் ஆதரவு தேவைப்படும். விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால், மெல்ல மெல்ல ‘வாழ்க்கை இயல்பு நிலைக்கு வருகிறது’ என்பதை நமக்கு உணர்த்தும்” என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், மற்றொரு நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி ஒருவர், அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதை எதிர்த்து தனது கருத்தை முன் வைக்கிறார். “ஆனால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் கற்பனை செய்து பாருங்கள். எங்களது விற்கும் கனவு நீங்கிவிடும்” என்று அவர் கூறுகிறார்.

ஐபிஎல் 2020 நடந்தாலும், விளம்பரதாரர்களுக்கு அது எந்தளவுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூற முடியாது.

ஐபிஜி மீடியாபிரான்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சின்ஹா கூறுகையில், இந்தியா விளையாடவிருந்த இரு தரப்பு கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது ஏற்கனவே விளம்பர செலவினங்களைக் குறைத்துவிட்டது என்கிறார்.

“மந்தநிலை மற்றும் குறைந்து வரும் விளம்பர டாலர்கள் ஐபிஎல்-ல் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐபிஎல் நடந்தாலும், போட்டிக்கான நுழைவு டிக்கெட் (ஐபிஎல் அல்லது உலக டி 20) மிக அதிகமாக இருக்கும். உலகளவில், விளையாட்டு 35 முதல் 40 சதவீதம் வரை வருவாய் வீழ்ச்சியைக் காண்கிறது, இந்தியாவில் கிரிக்கெட்டை அதிகமாக நம்பியிருப்பதால் இது அதிகமாக இருக்கலாம் ”என்று சின்ஹா ​​கூறுகிறார்.

‘பொருளாதார மறுமலர்ச்சி’ இல்லாவிட்டால், நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்போது, ஒளிபரப்பாளர்கள் விளம்பர விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

“இது ஆரம்ப நாட்களே; ஆனால் மிகவும் வெளிப்படையான சூழலாகும். இந்தியாவில் அடுத்த 90 நாட்களில் சுற்றுச்சூழல் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து ஒரு குறுகிய கால விலை நிர்ணயம் பரிசீலனையில் உள்ளது. உதாரணமாக, ஐபிஎல் ஒவ்வொரு ஆண்டும், 2020 ஆண்டுக்கான ஒப்பந்தங்கள் உட்பட, தொலைக்காட்சியில் 15-20 சதவிகிதம் விலை உயர்வைக் கண்டது. இப்போது, பொருளாதார மறுமலர்ச்சி மெதுவாகவும் முடங்கியதாகவும் இருந்தால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று சின்ஹா ​​மேலும் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு அதிக கூட்டம் கூடும் என்ற அதீத  நம்பிக்கையில், அதிக விளம்பரங்களை பெறலாம் என்று நினைக்க முடியாது. “எந்தவொரு கணிப்பும் செய்வது கடினம், தொழிலில் உள்ள அனைவரிடமும் பேசுங்கள். ஏன் விளையாட்டு சேனல்களுடன் மட்டும் பேச வேண்டும்? இரண்டு முதல் மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு அப்பால் உள்ள காலத்தைப் பற்றி யாருக்கும் பார்வை இல்லை. இது முற்றிலும் கணிக்கமுடியாத நிலைமை” என்று கார்னிக் கூறுகிறார்.

“பிசிசிஐ லீக்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இன்னும் அதை ரத்து செய்யவில்லை. ஆனால் அது அந்த நேரத்தின் சூழலைப் பொறுத்தது. அதன் பிறகே, அந்த குறிப்பிட்ட நிலைமையை மதிப்பிடுவதற்கும், பாதிப்பு ஏற்படுமா அல்லது பாதிப்பு ஏற்படாதா என்பதைப் பார்ப்பதற்கும் நாம் ஒரு சிறந்த நிலையில் இருப்போம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

தற்போதைய சீன-விரோத நிலைமைகள் கூட சிக்கலாக உள்ளது. ஏனெனில் அந்த நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் போன் பிராண்டுகள் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு லீக்குகளுடன் தொடர்புடையவை. “சீனாவுடனான தனது கதவுகளை இந்தியா மூடினால், மற்றொரு சாத்தியமான சவால் மற்றும் ஆபத்து இருக்கும்” என்று சின்ஹா கூறுகிறார்.

லாக் டவுன் திறக்கப்பட்டால், நிறுவனங்கள் விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கும். ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இருந்துடோக்கியோவுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் வரவிருக்கும் திருவிழா காலங்களில் பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை கையாளும் ஐஓஎஸ் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மீண்டும் ஒரு முறை அழைப்புகளைப் பெறத் தொடங்கியது. “அதிர்ஷ்டவசமாக, கடந்த ஏழு அல்லது எட்டு நாட்களாக இப்போது பல அழைப்புகளை நாங்கள் பெறுகிறோம். நிறுவனங்கள் இப்போது விளம்பரங்களுக்கு தயாராகி வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்தை சூடுபிடிக்க வைக்க முயற்சி செய்கின்றன” என்று ஐஓஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி நீரவ் தோமர் கூறுகிறார்.

பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரை புரமோட் செய்யும் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் துஹின் மிஸ்ரா கூறுகையில்,விளம்பரங்களின் தேதிகள் மாறிவிட்டன; ஆனால் நிறுவனங்கள் விளையாட்டுடனான உறவுகளை துண்டிக்கவில்லை. 2020 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டிருந்த பிராண்டுகள் மார்ச் மாதத்தில் மார்க்கெட்டிங் தொடங்கவிருந்தன, இப்போது அவை டிசம்பருக்கு நகரும்.

“இணைப்பு இன்னும் தொடர்கிறது. சில பிராண்டுகள் குறுகிய கால விளம்பரங்களைக் கொண்டிருந்தன, அவை தற்போது மாற்றப்பட்டுள்ளன. கணிக்க முடியாத இந்த நிலைமையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆம், இப்போது சில திட்டங்கள் தடம் புரண்டிருக்கலாம், ஆனால் அது தற்காலிகமானது” என்று பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.

தவிர, நோய்த் தொற்று பரவலால் தடுமாறும் பொருளாதார வீழ்ச்சியின் இந்த காலங்களில், நிறுவனங்களின் நிர்பந்தத்தையும் விளையாட்டு வீரர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று மிஸ்ரா கூறுகிறார். “பணம் பெறுவதில் தாமதம் அல்லது விளம்பரங்களில் மாற்றம் இருக்கலாம் ”என்று அவர் கூறுகிறார்.

பலரும், வெற்று இடங்களில் கூட நேரடி விளையாட்டுகளை திரும்ப எதிர்பார்க்கிறார்கள். “அரங்கத்தில் 30,000 பேர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பிராண்டுகள் உண்மையில் அவை அனைத்தையும் பூர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை. இது முதன்மையாக தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கானது. லாக் டவுனுக்கு பிறகு, மக்கள் விளையாட்டின் ஆற்றலையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் இன்னும் பாராட்டுவார்கள்” என்று மிஸ்ரா கூறுகிறார்.

தொலைபேசி மூலம் தகவல் – சுஷாந்த் இறப்பு செய்தி கேட்டு நொறுங்கிய தோனி!

Media Planners மற்றும் விளம்பரதாரர்கள், கடந்த காலங்களில் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் தொடர்புடைய ஹூண்டாய் என்ற பிராண்டைப் பற்றி பேசுகிறார்கள். லாக் டவுன் முன்பு அவர்கள் கிரெட்டா என்ற எஸ்யூவியை (கார்) அறிமுகப்படுத்தினர். மே மாதத்தில் 3,212 யூனிட் விற்பனை நடந்தது. ஆனால், விற்பனை இப்போது சரிந்திருந்தாலும், சந்தைக்கு சில நம்பிக்கையை அளிக்கிறது.

லாக் டவுன் காலத்திலும்,ஹெல்த்கேர், எஃப்.எம்.சி.ஜி மற்றும் மின் கற்றல் பிரிவு போன்ற துறைகளில் நிறைய பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன என்று கர்னிக் சுட்டிக்காட்டுகிறார். “ஈ-காமர்ஸ் இப்போது விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல்கள், மொபைல் போன்கள் மெதுவாக விளம்பரங்களைத் தொடங்கியுள்ளன. எனவே புதிய துறைகள் மீண்டும் வருகின்றன. ஜூலை மாதத்தில் விளம்பரங்களுக்கான சில நம்பிக்கைக்குரிய உரையாடல்களை நாங்கள் காண்கிறோம், ”என்று கார்னிக் மேலும் கூறுகிறார்.

இருப்பினும், இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன. “உண்மையில் நம்மை தாக்கியது என்ன என்பதை உணர எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதனுடன் இணங்குவது, அதைக் கடந்து, வணிகத் திட்டங்களை மீண்டும் பார்ப்பது என்பது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஒரு சோர்வான பயணமாக இருந்து வருகிறது. எங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உலகத்தை நாங்கள் மீண்டும் கண்டுபிடித்து, மறுதொடக்கம் செய்ய வேண்டும்,” என்று கார்னிக் முடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Marketers keep fingers crossed hope for ipl boost corona virus pandemic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X