Advertisment

தூங்கியவர் திடீரென எழுந்து பேட் செய்ய வந்தாரா? கேமராவில் சிக்கிய லபுசக்னே கூறுவது என்ன?

ஆஸ்திரேலிய வீரர் லாபுசாக்னே குட்டி தூக்கம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Marnus Labuschagne on napping in the dressing room WTC Final Tamil News

Marnus Labuschagne reacts after david Warner's wicket. (Screengrab/ ICC Instagram)

WTC Final 2023, IND vs AUS - Marnus Labuschagne  Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி இந்தியா 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.

Advertisment

பின்னர், 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது. லபுசேசன் 41 ரன்களுடனும், கிரீன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

குட்டி தூக்கம் போட்ட லாபுசாக்னே

நேற்றைய ஆட்டத்தில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் ஜோடி களமிறங்னர். இந்த ஜோடியை உடைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தீவிரமாக பந்துவீசி வந்த நிலையில், சிராஜ் வீசிய 3.3 ஓவரில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். இதனிடையே, நீண்ட நேரமாக ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த மார்னஸ் லாபுசாக்னே ட்ரெஸ்ஸிங் ரூமில் அடுத்ததாக களமிறங்க பேடை கட்டிக் கொண்டு சாய்ந்தவாறு கண்களை மூடி தூங்கும் காட்சிகள் காட்டப்பட்டது.

publive-image

வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்தை அடுத்து இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய சத்தமும் கரகோஷமும் குட்டி தூக்கம் போட்ட லாபுசாக்னேவின் தூக்கத்தை கலைத்தது. உடனே விழித்துக்கொண்ட அவர், பேட்டிங் செய்ய பேட்டை எடுத்துக்கொண்டு களம் புகுந்தார். லாபுசாக்னே குட்டி தூக்கம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

விளக்கம்

இந்நிலையில், மார்னஸ் லாபுசாக்னே குட்டி தூக்கம் பற்றி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் போட்டிக்கு இடையில் என் கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.

நான் என் நரம்புகளை கொஞ்சம் அமைதிப்படுத்த முயற்சித்தேன், நீங்கள் எல்லா நேரத்திலும் விளையாட்டைப் பார்க்க முடியாது, நான் விரைவிலே விழித்து எழுந்தேன். சிராஜ் பந்து வீசும்போது எனக்கு அதிக ஓய்வு கிடைக்கவில்லை." என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia London Sports Cricket World Test Championship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment