சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் தோல்வியடையப் போகிறார் என்பதை உணர்ந்து, முகத்தை கைகளால் மறைத்து அதிர்ச்சியில் இருந்த நிலையில், அவரைக் தோற்கடித்த 16 வயது சிறுவன் ஆர் பிரக்ஞானந்தாவின் முகத்தில் மகிழ்ச்சி அலை பரவியது. அவர் ஆஸ்லோவில் திரைக்கு மறுபுறம் என்ன நடந்திருக்கிறது என்பதை அகன்ற கண்களுடன் புரிந்து கொள்ள முடியாமல், சென்னை புறநகர் பாடியில் உள்ள தனது வீட்டில் அதிகாலை 2 மணி அளவில் கைகளால் வாயை மூடிக்கொண்டார்.
வேகமான புத்திசாலித்தனமான சதுரங்க விளையாட்டால் பிரக்ஞானந்தா மிகவும் சோர்வடைந்திருந்தார். அவர் கொஞ்சம் தூங்க வேண்டும் என்று விரும்பினார். “நான் படுக்க விரும்புகிறேன்” என்று அவர் சர்வதேச செஸ் ஃபெடரேஷன் இணையதளத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த கண்களுடன் கூறினார். ஆனால், அவருக்கு தூக்கம் வந்திருக்க வாய்ப்பில்லை.
பிரக்ஞானந்தா, “அந்த தருணத்தை என்னால் நம்ப முடியவில்லை, அந்த தருணம் எப்போதும் அவருடைய மிகப் பெரிய கனவின் ஒரு பகுதியாக இருந்தது. நார்வேயைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 சதுரங்க வீரர் கார்ல்சன், சதுரங்க விளையாட்டின் யாராலும் மறுக்கமுடியாத மன்னன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆன பிறகு, அவரை ஒருமுறை தோற்கடிப்பது என்பது எனது மிகப்பெரிய கனவு என்று பிரக்ஞானந்தா செய்தித்தாளிடம் கூறினார். “அவரிடம் (கார்ல்சன்) மிகவும் சிக்கலான பிரச்சனைக்கு கூட தீர்வு உள்ளது” என்று அவர் விளக்கினார்.
ஆனால், இந்த முறை எந்த தீர்வும் ஏற்படவில்லை, இறுதியாக பிரக்ஞானந்தாவின் கனவு நனவாகியது. விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பி ஹரிகிருஷ்ணா ஆகியோருக்குப் பிறகு, கார்ல்சனை வீழ்த்தி சாதனையை படைத்த மூன்றாவது இந்தியர் அவர் என்பது அவருடைய நம்பமுடியாத திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரக்ஞானந்தா 39 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார்.
அனேகமாக, இந்தியா விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு சதுரங்க விளையாட்டில் ஒரு முக்கியமான வீரரைக் கண்டுபிடித்துள்ளது. இந்திய செஸ் லீக் ஜூன் முதல் குறைந்தபட்சம் ரூ. 2 கோடி பரிசுத் தொகையுடன் தொடங்க உள்ளது.
உலக நம்பர் 1 சதுரங்க வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு வெறும் 16 தான். இந்த வயதில், விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்மாஸ்டர் ஆகவில்லை. ஆனால், பிரக்ஞானந்தா தனது வாழ்க்கையில் பல புள்ளிகளைக் குவித்தாலும், அல்லது எதிர்காலத்தில் அவர் யாரை தோற்கடித்தாலும் - அவர் ஒரு உலக சாம்பியனாக விரும்புகிறார் - அவர் தனது ஹீரோ மற்றும் உத்வேகமான கார்ல்சனை முதல் முறையாக தோற்கடித்ததை அவர் மறக்க மாட்டார். பிரக்ஞானந்தா இரவு தூங்க விரும்பினார், ஆனால், தூங்க முடியாது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.