இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.
390 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்த போது, ஸ்டாண்டில் இந்திய அணியின் ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய வாழ் பெண்ணிடம் தனது காதலை முன்மொழிந்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது. ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வோர்ன் இந்த சம்பவத்தை லைவ்வாக வர்ணனை செய்யத் தொடங்கினர். பெண் ‘ஆம்’ என்று தனது பதிலை சொன்னவுடன் மைதானமே அதிர்ந்து போனது. களத்தில் விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வேல் இதற்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Was this the riskiest play of the night? ????
She said yes – and that’s got @GMaxi_32‘s approval! ???? #AUSvIND pic.twitter.com/7vM8jyJ305
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தொடந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நாள் போட்டி தொடரை வென்றது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து 3 டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்கிறது.