/tamil-ie/media/media_files/uploads/2022/04/Untitled-design-1-10.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷா பதிரனாவை சேர்க்க அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
ரூ.20 லட்சத்துக்கு இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
19 வயதாகும் மதீஷா இலங்கை யு-19 உலகக் கோப்பை அணியில் 2020 மற்றும் 2022 இல் இடம்பிடித்தவர்.
இவரை ஜூனியர் மலிங்கா என்று அழைக்கிறார்.
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது வித்தியாசமான பந்துவீச்சுக்கு பெயர் போனவர்.
CSK vs MI Highlights: பெஸ்ட் ஃபினிஷர் என நிரூபித்த டோனி; சி.எஸ்.கே 2-வது வெற்றி
2020ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக மதீஷா இடம்பிடித்து வந்துள்ளார்.
இலங்கையின் கண்டியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படித்தவர் பதிரனா. இதே கல்லூரியில் தான் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸை நேற்றைய ஆட்டத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.