கிளென் மேக்ஸ்வெல் ஒரு புரியாத புதிர். 2014ம் ஆண்டு ஐபிஎல் சீசன் இவருக்கு மறக்க முடியாத ஒன்று. அப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், 16 போட்டிகளில் 552 ரன்கள் விளாசினார்.
Advertisment
ஸ்டிரைக் ரேட் 187.75.
48 பவுண்டரிகள், 36 சிக்ஸர்கள்.
அதன் பிறகு, 2018ம் ஆண்டு வரை ஐபிஎல்-ல் அவர் விளையாடிய போதும், இந்த பெர்ஃபாமன்ஸில் 10 பெர்சென்ட் கூட ஒன்றும் செய்யவில்லை.
ஆனால், கடந்த ஓராண்டாக ஓரளவுக்கு கான்ஃபிடன்ட் காட்டி வரும் மேக்ஸ்வெல், பேட்டிங்கிலும் தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து வருகிறார்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
விளைவு... மீண்டும் பஞ்சாப் அணி அவரை 10.75 கோடிக்கு வாங்கி ஆச்சர்யப்பட வைத்தது.
நிச்சயம் அவரே இப்படியொரு தொகையை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரபல பிக்பேஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல், நேற்று (டிச.20) பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான போட்டியில், பழைய பாட்ஷாவாக மாறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணியில், மற்ற வீரர்கள் ஏகத்துக்கும் சொதப்ப, மேக்ஸ்வெல் மட்டும் சிங்கிளாக நின்று 39 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இதில், 7 பவுண்டரியும், 5 சிக்ஸர்களும் அடங்கும். மற்றவர்கள் யாரும் 20 ரன்கள் கூட தாண்டவில்லை.
மேக்ஸ்வெல் இவ்வளவு அடித்தும் அந்த அணி 167-7 ரன்களே எடுத்தது.
பிறகு களமிறங்கிய பிரிஸ்பேன் 145-8 ரன்கள் மட்டும் எடுக்க, 22 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் வென்றது.
மேக்ஸ்வெல் மட்டும் அடிக்கவில்லை எனில், அந்த அணி 100 ரன்கள் கூட எடுத்திருக்காது.