Advertisment

விமானத்தில் திடீர் உடல்நலக் குறைவு: மயங்க் அகர்வால் ஹெல்த் அப்டேட்

கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், மருத்துவ ரீதியாக அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Mayank Agarwal health update after falling sick on flight Tamil News

மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணி திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mayank Agarwal: இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடருக்கான கர்நாடக அணியை கேப்டனான வழிநடத்தி வரும் மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அப்போது அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Advertisment

விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மயங்க் ஹெல்த் அப்டேட்

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், மருத்துவ ரீதியாக அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி  ஒருவர் (கே.எஸ்.சி.ஏ) தெரிவித்துள்ளார். 

“அவருக்கு (மயங்க் அகர்வால்) எந்த வித ஆபத்திலும் இல்லை. அவர் தற்போது அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார், மருத்துவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் அவரை பெங்களூருவுக்கு விமானத்தில் கொண்டு செல்வோம். இன்றிரவு அவர் டிஸ்சார்ச் ஆகிவிடுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அகர்தலாவிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 5177 மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் மீண்டும் தளத்திற்குத் திரும்பியது. பயணி இறக்கப்பட்டு, மேல் மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விமானம் மீண்டும் 1620 மணி நேரத்தில் அதன் இலக்கை நோக்கி புறப்பட்டது." என்று தெரிவித்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு திரிபுராவின் காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் ரபுகாரை பதிவு செய்ய வீரரின் மேலாளரால் அணுகப்பட்டார். இதுதொடர்பாக அவர் பேசுகையில் "(மயங்க்) விமானத்தில் அமர்ந்திருந்தபோது அவருக்கு முன்னால் ஒரு பையை பார்த்துள்ளார். அதை தண்ணீராக நினைத்து குடித்துள்ளார். அதனால் அவருக்கு வாயில் வீக்கம் மற்றும் புண்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை இயல்பாக உள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது மேலாளர் புகார் அளித்துள்ள நிலையில், புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம்,'' என்று கூறினார். 

விரைவில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும்  மயங்க் அகர்வால் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி நடப்பு சீசனில், அவர் இதுவரை இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அவரது தலைமையிலான கர்நாடக அணி நேற்று திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 15 புள்ளிகளுடன் சி-பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

தற்போது உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வரும் மயங்க் அகர்வால் சவுராஷ்டிரா மற்றும் பிப்ரவரி 2ம் தேதி சூரத்தில் தொடங்கும் ரயில்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்:  Mayank Agarwal ‘stable’ after falling sick on flight and being rushed to hospital

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mayank Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment