Mayank Yadav | IPL 2024 | Lucknow Super Giants | T20 World Cup 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பெங்களூருவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குயின்டன் டி காக் 81 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு 19.4-வது ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 153 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, மயங்க் யாதவுக்கு ஆட்டத்தின் நாயகன் விருதை வென்றார்.
எக்ஸ்பிரஸ் பவுலர் மயங்க்
முன்னதாக, பஞ்சாப் - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது லக்னோ அணியில் அறிமுகமாகிய மயங்க், அந்த போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஆரம்பம் முதலே 145 - 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாடுவதே என்னுடைய இலக்கு என கூறியுள்ளார்.
அதிவேகமாக பந்துவீசு எதிரணி வீரர்களை திணறடிக்கும் மயங்க் யாதவை ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை 2024 ஐ.பி.எல் முடிந்த உடனேயே தொடங்கும் நிலையில், எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"இந்த பையன் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை கண்டிப்பாக விளையாடுவார். இதுவரை நடந்த இந்த ஆண்டு ஐ.பி.எல். அவர்கள் சொல்வது போல் அவரிடம் பேஸ் உள்ளது. மயங்க் யாதவ், சின்னச்சாமி ஸ்டேடியத்தில் அனல் பறக்க விடுகிறார்." என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
"துரதிர்ஷ்டவசமாக சிராஜ் ஃபார்மில் இல்லை. மயங்க் யாதவ் இதுவரை தனது எக்ஸ் ஃபேக்ட்டருடன் உடன் அதிரடியாக உள்ளார். எனவே டி20 உலகக் கோப்பையில் சிராஜுக்குப் பதிலாக மயங்க்... என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?" என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் மயங்க் யாதவ் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தும் ரசிகர்களின் எக்ஸ் தள பதிவுகளை இங்கு பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“