Advertisment

ரன்னிங் ரேஸ் ஓடியபோது மாரடைப்பால் மரணம்: மாணவனுக்கு ஸ்டாலின் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Mayiladuthurai: student dies while running race, cm mk stalin announce relief Tamil News

மாரடைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் மாணவர் ரிஷி பாலன். இவர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்டார். 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்ற இவர், காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த போது, மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உரிழந்தார்.

Advertisment

இந்நிலையில், மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும் வேதனையும் அடைந்ததாகவும், துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Sports Cm Mk Stalin Mayiladuthurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment