Advertisment

மைக் டைசன் - ஜேக் பால் மோதல்... ஒளிபரப்ப திணறிய நெட்ஃபிளிக்ஸ்: மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

மைக் டைசன் - ஜேக் பால் குத்துச் சண்டையை நேரலையில் ஒளிபரப்ப திணறிய நெட்ஃபிளிக்ஸ் தளத்தை நெட்டிசன்கள் தற்போது வறுத்தெடுத்து வரும் நிலையில், இது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Memes storm Internet as Netflix crashes during Jake Paul fight against Mike Tyson Tamil News

மைக் டைசன் - ஜேக் பால் குத்துச் சண்டை போட்டியை ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் நேரலையில் ஒளிபரப்ப திணறிய நிலையில், மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற குத்து சண்டை வீரர் மைக் டைசன். 58 வயதான இவர், 980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல வீரராக வலம் வந்தார். எதிராளிகளை நாக்-அவுட் செய்வதற்கு பெரிதும் அறியப்படும் இவர் 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தார். 

Advertisment

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். களத்தில் இவரைக் கண்டு அஞ்சாத எதிரிகளே இல்லை. இவரை ரோல் மாடலாக கொண்டு குத்து சண்டையில் இந்திய வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துசண்டையில் மைக் டைசன் களமிறங்கியுள்ளார். அவர் இன்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 27 வயதான குத்துசண்டை வீரர் ஜேக் பாலை எதிராக களமாடினார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் வெற்றி பெற்றார்.

இணையத்தை கலக்கும் மீம்ஸ் 

இந்நிலையில், மைக் டைசன் - ஜேக் பால் மோதும் இந்தக் குத்துச் சண்டை போட்டியை ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் நேரலையில் ஒளிபரப்பியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலே ஏராளமானோர் நெட்ஃபிளிக்ஸில் நேரலையில் பார்க்க குவிந்துள்ளனர். ஆனால், ரசிகர்களுக்கு நேரலை அதாவது லைவ் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த தொழிநுட்ப கோளாறை நெட்ஃபிளிக்ஸ் சரி செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், பார்வையாளர்கள் பலரும் அதே ஏமாற்றமான முடிவை சந்தித்தனர். இதனால், பார்வையாளர்கள் அனைவரும் கடும் எரிச்சலடைந்தனர். தங்களது கோபத்தை சமூக வலைதள பக்கங்களில் கொட்டித் தீர்த்து வருகிறார்கள். மேலும், பலரும் மீம்ஸ் போட்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தை பங்கமாக கலாய்த்து தள்ளி வருகிறார்கள். 

நெட்டிசன்கள் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தை வறுத்தெடுத்து வரும் நிலையில், இது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Latest Tamil Memes Mike Tyson Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment