Cricket viral Tamil News: சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வரிசை கட்டி நிற்பதால், வீரர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு நீண்ட நேரம் செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, வீரர்கள் மைதாங்களில் இருந்ததை விட பயோ-பபிளில் தான் அதிக நாட்களை கழித்தனர். இதனால், வீரர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களை விட்டு விலகியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் குமார் கார்த்திகேயா சிங் தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமீபத்திதில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்திற்கான கேப்ஷனில், “9 வருடங்கள் 3 மாதங்களுக்குப் பிறகு எனது குடும்பத்தினரையும் அம்மாவையும் சந்தித்தேன். எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நெகிழ்வான பதிவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, “இதையேத்தான் நாங்கள் சரியான ஹோம் கம்மிங் என்று அழைக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளது.
குமார் கார்த்திகேயா சிங் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். நான்கு போட்டிகளில், அவர் 3 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், அவர் இந்தாண்டுக்கான ரஞ்சி கோப்பையை வென்ற மத்திய பிரதேச அணியிலும் இடம்பிடித்து இருந்தார்.
கார்த்திகேயா சிங், தொடர் கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு பிறகு, தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக தனது தாயையும், குடும்பத்தினரையும் பிரிந்து கிரிக்கெட் விளையாடிய அவர் தற்போது மீண்டும் இணைந்துள்ளார். அவருடைய புகைடப்பட பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் குமார் கார்த்திகேயா சிங்கின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Met my family and mumma ❤️ after 9 years 3 months . Unable to express my feelings 🤐#MumbaiIndians #IPL2022 pic.twitter.com/OX4bnuXlcw
— Kartikeya Singh (@Imkartikeya26) August 3, 2022
मां 💙
— Mumbai Indians (@mipaltan) August 3, 2022
This is what we call as a perfect 🏠 coming 🥹🤩#OneFamily #DilKholKe #MumbaiIndians @Imkartikeya26 pic.twitter.com/FhjetpawwG
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil