Chennai Super Kings vs Mumbai Indians, IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேறும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின
ஆங்கிலத்தில் படிக்க: MI vs CSK LIVE Score, IPL 2024: Hardik Pandya’s Mumbai Indians take on Ruturaj Gaikwad’s Chennai Super Kings at Wankhede Stadium
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Apr 14, 2024 23:24 ISTரோகித் சதம்; மும்பை இந்தியன்ஸ் தோல்வி
20 ஆவது ஓவரை பதிரனா வீசினார். ரோகித் 2 பவுண்டரி அடித்து சதம் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 23:21 ISTமும்பை இந்தியன்ஸ்: 19 ஓவர்கள் முடிவில் 173-6
19 ஆவது ஓவரை முஷ்தாபிசுர் வீசினார். கடைசி பந்தில் ரோகித் சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 23:14 ISTஷெப்பர்டு அவுட்; மும்பை இந்தியன்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 160-6
18 ஆவது ஓவரை பதிரனா வீசினார். 3 ஆவது பந்தில் ஷெப்பர்டு போல்டானார். இதையடுத்து நபி களமிறங்கினார். அந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 23:11 ISTடேவிட் அவுட்; மும்பை இந்தியன்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 154-5
17 ஆவது ஓவரை முஷ்தாபிசுர் வீசினார். முதல் 2 பந்தில் 2 சிக்சர் அடித்த டேவிட், 3 ஆவது பந்தில் அவுட் ஆனார். அவர் 13 ரன்களில் ரவிந்திராவிடம் கேட்ச் கொடுத்தார். இதையடுத்து ஷெப்பர்டு களமிறங்கினார். ரோகித் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 23:08 ISTபாண்டியா அவுட்; மும்பை இந்தியன்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 135-4
16 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். 3 ஆவது பந்தில் பாண்டியா அவுட் ஆனார். பாண்டியா 2 ரன்களில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். இதையடுத்து டிம் டேவிட் களமிறங்கினார். அந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:56 ISTமும்பை இந்தியன்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 132-3
15 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். சிறப்பாக வீசிய தாக்கூர் அந்த ஓவரில் 2 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:55 ISTதிலக் அவுட்; மும்பை இந்தியன்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 130-3
14 ஆவது ஓவரை பதிரனா வீசினார். திலக் ஒரு பவுண்டரி அடித்தார். இருப்பினும் 5 ஆவது பந்தில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து பாண்டியா களமிறங்கினார். அந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:43 ISTமும்பை இந்தியன்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 124-2
13 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். திலக் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:42 ISTமும்பை இந்தியன்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 118-2
12 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். ரோகித் ஒரு சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:41 ISTமும்பை இந்தியன்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 108-2
11 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். ரோகித் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். திலக் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:40 ISTமும்பை இந்தியன்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 90-2
10 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். திலக் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:38 ISTரோகித் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 81-2
9 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். ரோகித் ஒரு பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார். அந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:36 ISTஇஷான், சூர்யகுமார் அவுட்; மும்பை இந்தியன்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 75-2
8 ஆவது ஓவரை பதிரனா வீசினார். முதல் பந்தில் இஷான் அவுட் ஆனார். அவர் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் 2 ஆவது பந்துகளில் டக் அவுட் ஆனார். அவர் முஸ்தாபிசுரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய திலக் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:33 ISTமும்பை இந்தியன்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 70-0
7 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். ரோகித் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:21 ISTமும்பை இந்தியன்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 63-0
6 ஆவது ஓவரை மீண்டும் தாக்கூர் வீசினார். ரோகித் 2 பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:19 ISTமும்பை இந்தியன்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 53-0
5 ஆவது ஓவரை மீண்டும் முஸ்தாபிசுர் வீசினார். ரோகித் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:05 ISTமும்பை இந்தியன்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 38-0
4 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். இஷான் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 22:02 ISTமும்பை இந்தியன்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 25-0
3 ஆவது ஓவரை மீண்டும் தேஷ்பாண்டே வீசினார். இஷான் பவுண்டரி அடித்தார். ரோகித் சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 21:58 ISTமும்பை இந்தியன்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 13-0
2 ஆவது ஓவரை முஷ்தாபிசுர் வீசினார். ரோகித் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 21:56 ISTமும்பை இந்தியன்ஸ்: முதல் ஓவர் முடிவில் 5-0
மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். ரோகித் 5 ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்தது.
-
Apr 14, 2024 21:28 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 20 ஓவர்கள் முடிவில் 206-4
20 ஆவது ஓவரை மீண்டும் பாண்டியா வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த மிட்சல், 2 ஆவது பந்தில் அவுட் ஆனார். மிட்சல், நபியிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தோனி முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கினார். அடுத்த 2 பந்துகளையும் சிக்சருக்கு விளாசி, ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க, அந்த ஓவரில் 26 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 21:18 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 19 ஓவர்கள் முடிவில் 180-3
19 ஆவது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். சிறப்பாக வீசி, சி.எஸ்.கே ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். அந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 21:12 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 173-3
18 ஆவது ஓவரை மீண்டும் ஜெரால்டு வீசினார். துபே 2 பவுண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 21:05 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 161-3
17 ஆவது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். 5 ஆவது பந்தில் துபே பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 21:01 ISTருதுராஜ் அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 151-3
16 ஆவது ஓவரை மீண்டும் பாண்டியா வீசினார். 2 ஆவது பந்தில் ருதுராஜ் அவுட் ஆனார். அவர் நபியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். இதையடுத்து மிட்சல் களமிறங்கினார். அந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:58 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 149-2
15 ஆவது ஓவரை மீண்டும் மத்வால் வீசினார். துபே ஒரு பவுண்டரி அடித்தார். ருதுராஜ் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:51 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 132-2
14 ஆவது ஓவரை மீண்டும் ஷெப்பர்டு வீசினார். துபே 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். ருதுராஜ் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:47 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 110-2
13 ஆவது ஓவரை மீண்டும் ஜெரால்டு வீசினார். 4 ஆவது பந்தில் ருதுராஜ் சிக்சர் விளாசினார். அந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:39 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 102-2
12 ஆவது ஓவரை மீண்டும் மத்வால் வீசினார். கடைசி பந்தில் ருதுராஜ் சிக்சர் விளாசினார். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:34 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 92-2
11 ஆவது ஓவரை ஷெப்பர்டு வீசினார். முதல் பந்திலும் கடைசி பந்திலும் துபே பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:29 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 80-2
10 ஆவது ஓவரை பாண்டியா வீசினார். துபே 3 பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:23 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 65-2
9 ஆவது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். பும்ரா சிறப்பாக பந்துவீசினார். அந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:19 ISTரவீந்திரா அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 61-2
8 ஆவது ஓவரை ஷ்ரேயாஸ் கோபால் வீசினார். ரவீந்திரா 4 ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்திலே இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரவீந்திரா 21 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:14 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 52-1
7 ஆவது ஓவரை மீண்டும் நபி வீசினார். நபி சிறப்பாக பந்துவீசினார். அந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:09 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 48-1
6 ஆவது ஓவரை மத்வால் வீசினார். ரவீந்திரா 2 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ருதுராஜ், 4 ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 20:02 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 38-1
5 ஆவது ஓவரை மீண்டும் ஜெரால்டு வீசினார். முதல் பந்தை பவுண்டரி அடித்த ருதுராஜ், 2 ஆவது பந்தை சிக்சருக்கு விளாசினார். மீண்டும் 4 ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 19:56 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 24-1
4 ஆவது ஓவரை பும்ரா வீசினார். கடைசி பந்தில் ரவீந்திரா பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 19:46 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 18-1
3 ஆவது ஓவரை நபி வீசினார். 4 ஆவது பந்தில் ருதுராஜ் சிக்சர் விளாசினார். அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 19:44 ISTரஹானே அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 9-1
இரண்டாவது ஓவரை ஜெரால்டு வீசினார். 4 ஆவது பந்தில் ரஹானே அவுட் ஆனார். அவர் 5 ரன்கள் எடுத்து பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 19:35 ISTசென்னை சூப்பர் கிங்ஸ்: முதல் ஓவரில் 6-0
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ரவீந்திரா களமிறங்கினர். முதல் ஓவரை நபி வீசினார். ரஹானே 5 ஆவது பந்தில் ஒரு பவுண்டரி விளாசினார். சென்னை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2024 19:19 ISTமும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்
-
Apr 14, 2024 19:18 ISTசென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்.
-
Apr 14, 2024 19:13 ISTதீக்ஷனா வெளியே, பதிரனா உள்ளே - ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்: முதலில் பந்து வீச விரும்பினோம், டாஸ் நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இதுதான் ஐ.பி.எல்.,லின் அழகு. எப்போதும் ஏற்ற இறக்கம் இருக்கும். இரு அணிகளுக்கும் நல்ல போட்டி, இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும். சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். தீக்ஷனாவுக்கு பதிலாக பத்திரனா வருகிறார், அதுதான் ஒரே ஒரு மாற்றம்.
-
Apr 14, 2024 19:10 ISTமுதலில் பந்து வீச விரும்புகிறோம் - ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா: நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம், பனி விளையாடும். இது (பிட்ச்) கடந்த ஆட்டத்தை விட சிறப்பாக உள்ளது, நிறைய ரன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படைகளை கடைபிடிக்க வேண்டும். வேகத்தை பெற வெற்றி மிகவும் முக்கியமானது. எங்களால் இரண்டு ஆட்டங்களில் உறுதியாக வெற்றி பெற முடிந்தது. அதுதான் ஐ.பி.எல்.,லுக்கு அழகு, அனைவரும் பங்களிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் அணி இறுதியில் இலக்குகளை அடைய முடியும். 10 ஓவர்களுக்குப் பிறகு பனி பெய்யத் தொடங்கும். மாலையில் கனமாகிறது. அதே அணியுடன் விளையாடுகிறோம்.
-
Apr 14, 2024 19:08 ISTடாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது
-
Apr 14, 2024 17:47 ISTவான்கடே பிட்ச் எப்படி இருக்கும்?
பனி ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் டாஸ் வென்ற கேப்டன் பந்துவீச முடிவு செய்வார் என்பது வெளிப்படையானது. ஆடுகளம் ரன்களால் நிரம்பியதாகத் தெரிகிறது, இங்கு கடந்த இரண்டு போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியும் அதிக ரன்கள் குவிக்கும் ஆட்டமாக இருக்கும்.
-
Apr 14, 2024 17:05 ISTமும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால். (இம்பாக்ட் ப்ளேயர்: சூர்யகுமார் யாதவ்)
-
Apr 14, 2024 16:49 ISTசி.எஸ்.கே உத்தேச அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா. (இம்பாக்ட் ப்ளேயர்: சிவம் துபே)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.