MI vs CSK Highlights: பதிலடி கொடுத்த மும்பை; சி.எஸ்.கே-வுக்கு 6-வது தோல்வி

IPL 2025 Cricket Score, MI vs CSK Score Online Today Match: ஐ.பி.எல் 202 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிக்ஸ் அணிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் லீக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

IPL 2025 Cricket Score, MI vs CSK Score Online Today Match: ஐ.பி.எல் 202 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிக்ஸ் அணிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் லீக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ms

மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே பலப்பரீட்சை

IPL 2025, MI vs CSK Cricket Score Updates: 18-வது ஐ.பி.எல் தொடரில் 38-வது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

Advertisment

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஷேக் ரஷீத், ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீபக் சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினார். சென்னை அணியில், ஆயுஷ் மஹத்ரே 32, ரவீந்திர ஜடேஜா 53, சிவம் துபே 50 ரன்கள் எடுத்தனர். 

இதன் மூலம், 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா களமிறங்கினர்.ரியான் 24 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆயூஷ் மஹத்ரேவிடம் கேட்ச்கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment
Advertisements

இந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சரிவில் இருந்து மீண்டு வருகிறது. அதே போல, 

சென்னை அணி முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில், பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் தோல்வி அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதனால், சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக் கணக்கைத் தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

பெவன் ஜேக்கப்ஸ், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), திலக் வர்மா, மிட்செல் சாண்ட்னர், நமன் திர், வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன்,ட் தீபக் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா 
 
சென்னை சூப்பர் கிக்ஸ் அணி:

டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஜமி ஒவெர்டான், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, சாம் கரன், எம்.எஸ். தோனி, கலீல் அஹமடு, மதீஷா பதிரானா, நூர் அஹமது 

  • Apr 20, 2025 23:01 IST

    மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

    மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாதத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார்.



  • Apr 20, 2025 22:58 IST

    சூர்யகுமார் அதிரடி அரைசதம்

    மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிரடியாக அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம் அடித்தார்.  சென்னை அணி வீக்கெட்  வீழ்த்த முடியாமல் திணறுகிறது.



  • Apr 20, 2025 22:27 IST

    ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்... விக்கெட் வீழ்த்த திணறும் சென்னை... வேகமாக ரன் குவிக்கும் மும்பை!

    மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.  மும்பை அணி 12.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி வீக்கெட்  வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.



  • Apr 20, 2025 22:06 IST

    ரியான் ரிக்கெல்டன் அவுட்

    மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கெல்டன் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆயுஷ் மஹத்ரேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.



  • Apr 20, 2025 21:42 IST

    177 ரன்கள் இலக்கு; மும்பை ஆரம்பமே அதிரடி!

    177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர்.



  • Apr 20, 2025 21:23 IST

    சிவம் துபே, ஜடேஜா அதிரடி... 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • Apr 20, 2025 21:21 IST

    ஏமாற்றம் அளித்த தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனி 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஜமி ஒவெர்டான் பேட்டிங் செய்ய வந்தார்.



  • Apr 20, 2025 20:58 IST

    பும்ரா பந்தில் ஷிவம் துபே அவுட்; களத்துக்கு வந்த தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிவம் துபே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில், பும்ரா பந்தில் வில் ஜேக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து எம்.எஸ் தோனி களமிறங்கினார்.



  • Apr 20, 2025 20:54 IST

    சிவம் துபே அதிரடி அரை சதம்... சென்னையின் உயரும் ரன் ரேட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே ஜோடி நிதானமாக விளையாடிய நிலையில், அதிரடியாக  விளையாடிய சிவம் துபே, 30 பந் துகளில் அரைசதம் அடித்தார்.  சென்னை அணி, 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Apr 20, 2025 20:18 IST

    நிதானமாக விளையாடிய ஷேக் ரஷீத் அவுட் 

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேக் ரஷீத் நிதானமாக விளையாடிய நிலையில், 20 ரன்கள் எடுத்திருந்தபோது, அஸ்வனி குமார் பந்தில் ரியான் ரிக்கெல்டன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஷிவம் துபே பேட்டிங் செய்ய வந்தார். சென்னை அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது



  • Apr 20, 2025 20:14 IST

    அதிரடி காட்டிய இளம் வீரர் ஆயுஷ் மஹத்ரா அவுட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மஹத்ரா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 3 ரன்கள் எடுத்த நிலையில், திபக் சாஹர் பந்தில் மிட்செல் சாண்ட்ன்ர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரவிந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார்.



  • Apr 20, 2025 19:49 IST

    அஸ்வனி குமார் பந்தில் ரச்சின் ரவீந்திரா அவுட் 

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ரன் எடுத்த நிலையில், அஸ்வனி குமார் பந்தில் ரியான் ரிக்கெல்டன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, இளம் ஆயுஷ் மஹத்ரே பேட்டிங் செய்ய களமிறங்கினார்.



  • Apr 20, 2025 19:35 IST

    ஓபனிங் இறங்கிய ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர்க்க ஆட்டக்காரர்களாக ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரை எதிர்கொண்ட ஷேக் ரஷீத் 3 பந்துகளில் 1 ரன் எடுத்தார்.  ரச்சின் ரவீந்திரா 2 பந்துகளில் 1 ரன் எடுத்தார். 1 ரன் அடித்த ரஷீத், 2வது ஓவரை சந்திக்க உள்ளார்.

    முதல் ஓவர் முடிவில்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. 



  • Apr 20, 2025 19:15 IST

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.



Mi Vs Csk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: