Advertisment

தொடர்ந்து 7வது ஆண்டாக தோல்வியுடன் தொடரை தொடங்கிய மும்பை!

Mumbai Indians vs Delhi Capitals: டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KXIP vs DC Live Score, Delhi Capitals vs Kings XI Punjab Live

KXIP vs DC Live Score, Delhi Capitals vs Kings XI Punjab Live

Vivo IPL 2019, Mumbai Indians vs Delhi Capitals Live Score: ஐபிஎல் 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதும் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில், டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், தொடர்ந்து 7வது ஆண்டாக, ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

Advertisment

 

Live Blog

MI vs DC Live Cricket Score














Highlights

    23:59 (IST)24 Mar 2019

    7வது ஆண்டாக தோல்வி

    2013ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, ஐபிஎல் தொடரை தோல்வியுடனே தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அதேசமயம், அதே 2013ம் ஆண்டு முதல், தொடரை தோல்வியுடன் தொடங்கிய டெல்லி, இம்முறை சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறது.

    23:52 (IST)24 Mar 2019

    மும்பை தோல்வி

    கடைசி விக்கெட்டான பும்ரா, காயம் காரணமாக களமிறங்காத நிலையில், 9 விக்கெட்டுடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால், டெல்லி 37 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

    23:47 (IST)24 Mar 2019

    யுவராஜ் அவுட்!

    35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த யுவராஜ், ரபாடா ஓவரில் ராகுல் டெவாட்டியா-விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது உண்மையில் ரியல் யுவராஜின் ஆட்டம் கிடையாது தான். ஆனால், உண்மை என்னவெனில், யுவராஜ் பல மாதங்களுக்குப் பிறகு 50 அடித்திருக்கிறார்.

    23:42 (IST)24 Mar 2019

    யுவராஜ் 50

    யுவராஜ் சிங் 50 ரன்கள் அடிக்க, 90'ஸ் கிட்ஸ் மனதில் நிச்சயம் ஒரு சோக ரீவைண்ட் ஓடியிருக்கும். ச்சே! எவ்ளோ நாளாச்சு யுவிய இப்படி பார்த்து!.

    23:36 (IST)24 Mar 2019

    காலியான கட்டிங்

    ரபாடா வீசிய 16.2வது பந்தில், பென் கட்டிங் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆக்சுவலி இவரும் ஒரு நல்ல ஹிட்டர் தான். இவர் யுவராஜுடன், கடைசி வரை நின்றிருந்தால், வெற்றிக் கூட பெற்றிருக்கலாம். ஆனால், இனிமேல்.....?

    23:29 (IST)24 Mar 2019

    மாஸ் காட்டும் யுவராஜ்

    16வது ஓவரை வீசிய அக்ஷர் படேல் ஓவரில், இரண்டு சிக்ஸர்கள் உட்பட 16 ரன்களை திரட்டினர் யுவராஜ் சிங். 

    23:26 (IST)24 Mar 2019

    க்ருனால் பாண்ட்யா அவுட்!

    14 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய க்ருனால் பாண்ட்யா, போல்ட் ஓவரில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். இனி எல்லாம் 'யுவி' மயம் தான்!.

    23:23 (IST)24 Mar 2019

    க்ருனால் - யுவி

    க்ருனால் பாண்ட்யா - யுவராஜ் சிங் ஜோடி தான் மும்பை அணியின் கடைசி நம்பிக்கை. இருவரும் அதிரடியாகவே ஆடி வருகின்றனர். இஷாந்த் ஷர்மா ஓவரில் மட்டும் 15 ரன்கள் திரட்டினார் க்ருனால்.

    23:08 (IST)24 Mar 2019

    ஹர்திக் 0

    ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலேயே அக்ஷர் படேல் ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது.

    23:06 (IST)24 Mar 2019

    பொல்லார்ட் அவுட்!

    13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த பொல்லார்ட் கீமோ பால் ஓவரில், கவரில் நின்றுக் கொண்டிருந்த ராகுல் டெவாட்டியாவிடம், கேட்ச் கொடுத்து வெளியேறினார். அது Knuckle பால் என்பது கூடுதல் தகவல்!

    22:55 (IST)24 Mar 2019

    யுவி ஆன் தி டிராக்!

    மும்பை இந்தியன்ஸ் அணி, 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. கீரன் பொல்லார்ட் 15 ரன்களுடனும், யுவராஜ் சிங் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    22:40 (IST)24 Mar 2019

    டி காக் அவுட்!

    அதே இஷாந்த் ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தில் பவுண்டரி விளாசிய டி காக், 5வதாக வந்த இஷாந்தின் ஷார்ட்  பந்தில், டீப்பில் நின்றுக் கொண்டிருந்த போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    22:37 (IST)24 Mar 2019

    ரன் அவுட்!

    இஷாந்த் ஓவரில், சூர்யகுமார் யாதவ், டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் துல்லியமான த்ரோவில் 2 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார், 

    22:28 (IST)24 Mar 2019

    ரோஹித் ஷர்மா அவுட்!

    இஷாந்த் ஷர்மா ஓவரில் சிக்ஸ் அடிக்க நினைத்து, 14 ரன்களில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார் ரோஹித் ஷர்மா. நல்ல ஷாட்.... ஆனால் போதுமான தூரம் கிடைக்காமல், பந்து மேலே எழும்பிவிட்டது. 

    22:22 (IST)24 Mar 2019

    அதிரடி காட்டும் டி காக்

    போல்ட் ஓவரில் டி காக் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரிகள் விளாச, அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் திரட்டப்பட்டது. ரன் ரேட் 9.16 

    22:11 (IST)24 Mar 2019

    வெற்றிப் பெறுமா மும்பை?

    214 எனும் மிகப்பெரிய இலக்கோடு களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

    21:55 (IST)24 Mar 2019

    214 ரன்கள் இலக்கு!

    27 பந்துகளில் ரிஷப் பண்ட் 78 ரன்கள் குவித்தார். இதில், 7 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 288.89. கடைசி 6 ஓவரில் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் 99 ரன்களைக் விளாசித் தள்ளியது.

    21:47 (IST)24 Mar 2019

    ஒரே ஓவரில் 20 ரன்

    ராசிக் சலாம் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி என 20 ரன்களை விளாசினார் ரிஷப் பண்ட்

    21:40 (IST)24 Mar 2019

    18 பந்துகளில் அரைசதம்

    பும்ரா பந்துகளையும் விட்டு வைக்காத ரிஷப் பண்ட், 18 பந்துகளில் 51 ரன்கள் விளாசி களத்தில் நிற்கிறார். 

    21:38 (IST)24 Mar 2019

    கீமோ பால், அக்ஷர் படேல் அவுட்!

    மெக்லீகன் ஓவரில் 3 ரன்களில் கீமோ பால் கேட்ச் ஆனார். 17வது ஓவரின் முடிவில், டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, பும்ரா ஓவரில் அக்ஷர் படேல் 4 ரன்களில் வெளியேறினார்.

    21:28 (IST)24 Mar 2019

    பூம் பூம் பண்ட்!

    ஹர்திக் பாண்ட்யாவின் 16வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் விளாசினார் ரிஷப் பண்ட்

    21:21 (IST)24 Mar 2019

    தவான் அவுட்!

    36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார். 

    21:16 (IST)24 Mar 2019

    வாவ் ஹர்திக்!

    ஹர்திக் பாண்ட்யாவின் 14வது ஓவரில் வெறும் 2 ரன்களே எடுக்கப்பட்டது. அதில், 5 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 1 ரன் மட்டுமே எடுத்தார். 

    21:11 (IST)24 Mar 2019

    காலின் இங்ரம் அவுட்!

    பென் கட்டிங் ஓவரில், 47 ரன்கள் எடுத்திருந்த காலிங் இங்ரம், சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யாவின் நல்ல கேட்ச் அது என்று சொல்லலாம்!.

    21:00 (IST)24 Mar 2019

    100-2

    11.3வது ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 100 ரன்களை கடந்தது. 

    20:54 (IST)24 Mar 2019

    50+ பார்ட்னர்ஷிப்

    10 ஓவர்கள் முடிவில், டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. தவான் - இங்ரம் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்தது. 

    20:45 (IST)24 Mar 2019

    யார் இந்த சிறுவன்?

    மும்பை இந்தியன்ஸ் அணி 17 வயதே ஆனா ராசிக் சலாம் எனும் சிறுவனை அறிமுக வீரராக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறக்கியுள்ளது. அச்சிறுவனின் வேகமும், லைனும் கவனத்தைப் பெறுகிறது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இச்சிறுவன் ஐபிஎல்-ல் முதன் முதலாக தற்போது பங்கேற்றுள்ளார்.

    20:36 (IST)24 Mar 2019

    45/2

    ஆறு ஓவர்கள் முடிவில், டெல்லி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.

    20:29 (IST)24 Mar 2019

    நீல சட்டையில் யுவி!

    அதாங்க நம்ம யுவராஜ் சிங்! யாருமே ஏலத்தில் எடுக்காத நம்ம சிங்கை மும்பை அணி, அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கே வாங்கியது. வாங்கியது மட்டுமில்லாமல், இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    20:23 (IST)24 Mar 2019

    சிக்ஸ் அண்ட் விக்கெட்!

    வாவ்! இது கிளாஸ் சிக்ஸ். ஷ்ரேயாஸ் ஐயரிடம் இருந்து... மெக்லீகன் ஓவரில் அபாரமான சிக்ஸ் ஒன்றை அடித்து, அடுத்த பந்திலேயே பொல்லார்டின் அபாரமான கேட்சால் வெளியேறினார் ஐயர். இது நிச்சயம் டெல்லி அணிக்கு பெரிய ஏமாற்றமே!

    20:10 (IST)24 Mar 2019

    ப்ரித்வி அவுட்!

    மெக்லீனகனின் அவுட் ஸ்விங் பந்தில், ப்ரித்வி ஷா7 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    20:08 (IST)24 Mar 2019

    மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் XI

    ரோஹித் ஷர்மா (c), குயிண்டன் டி காக், சூர்யா குமார் யாதவ், க்ருனால் பாண்ட்யா, யுவராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பென் கட்டிங், மிட்சல் மெக்லீனகன், ராசிக் சலாம், ஜஸ்ப்ரித் பும்ரா

    20:04 (IST)24 Mar 2019

    டெல்லி பேட்டிங்

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர்.

    கடந்த சீசனின் பாதியில் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயர், நடப்பு சீசனில், டெல்லி அணியின் முழு நேர கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
    Ipl Mumbai Indians
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment