Vivo IPL 2019, Mumbai Indians vs Delhi Capitals Live Score: ஐபிஎல் 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதும் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில், டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், தொடர்ந்து 7வது ஆண்டாக, ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.
Live Blog
MI vs DC Live Cricket Score
கடந்த சீசனின் பாதியில் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயர், நடப்பு சீசனில், டெல்லி அணியின் முழு நேர கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
2013ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, ஐபிஎல் தொடரை தோல்வியுடனே தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அதேசமயம், அதே 2013ம் ஆண்டு முதல், தொடரை தோல்வியுடன் தொடங்கிய டெல்லி, இம்முறை சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறது.
கடைசி விக்கெட்டான பும்ரா, காயம் காரணமாக களமிறங்காத நிலையில், 9 விக்கெட்டுடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால், டெல்லி 37 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த யுவராஜ், ரபாடா ஓவரில் ராகுல் டெவாட்டியா-விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது உண்மையில் ரியல் யுவராஜின் ஆட்டம் கிடையாது தான். ஆனால், உண்மை என்னவெனில், யுவராஜ் பல மாதங்களுக்குப் பிறகு 50 அடித்திருக்கிறார்.
யுவராஜ் சிங் 50 ரன்கள் அடிக்க, 90’ஸ் கிட்ஸ் மனதில் நிச்சயம் ஒரு சோக ரீவைண்ட் ஓடியிருக்கும். ச்சே! எவ்ளோ நாளாச்சு யுவிய இப்படி பார்த்து!.
ரபாடா வீசிய 16.2வது பந்தில், பென் கட்டிங் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆக்சுவலி இவரும் ஒரு நல்ல ஹிட்டர் தான். இவர் யுவராஜுடன், கடைசி வரை நின்றிருந்தால், வெற்றிக் கூட பெற்றிருக்கலாம். ஆனால், இனிமேல்…..?
16வது ஓவரை வீசிய அக்ஷர் படேல் ஓவரில், இரண்டு சிக்ஸர்கள் உட்பட 16 ரன்களை திரட்டினர் யுவராஜ் சிங்.
14 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய க்ருனால் பாண்ட்யா, போல்ட் ஓவரில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். இனி எல்லாம் ‘யுவி’ மயம் தான்!.
க்ருனால் பாண்ட்யா – யுவராஜ் சிங் ஜோடி தான் மும்பை அணியின் கடைசி நம்பிக்கை. இருவரும் அதிரடியாகவே ஆடி வருகின்றனர். இஷாந்த் ஷர்மா ஓவரில் மட்டும் 15 ரன்கள் திரட்டினார் க்ருனால்.
ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலேயே அக்ஷர் படேல் ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது.
13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த பொல்லார்ட் கீமோ பால் ஓவரில், கவரில் நின்றுக் கொண்டிருந்த ராகுல் டெவாட்டியாவிடம், கேட்ச் கொடுத்து வெளியேறினார். அது Knuckle பால் என்பது கூடுதல் தகவல்!
மும்பை இந்தியன்ஸ் அணி, 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. கீரன் பொல்லார்ட் 15 ரன்களுடனும், யுவராஜ் சிங் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அதே இஷாந்த் ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தில் பவுண்டரி விளாசிய டி காக், 5வதாக வந்த இஷாந்தின் ஷார்ட் பந்தில், டீப்பில் நின்றுக் கொண்டிருந்த போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இஷாந்த் ஓவரில், சூர்யகுமார் யாதவ், டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் துல்லியமான த்ரோவில் 2 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார்,
இஷாந்த் ஷர்மா ஓவரில் சிக்ஸ் அடிக்க நினைத்து, 14 ரன்களில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார் ரோஹித் ஷர்மா. நல்ல ஷாட்…. ஆனால் போதுமான தூரம் கிடைக்காமல், பந்து மேலே எழும்பிவிட்டது.
போல்ட் ஓவரில் டி காக் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரிகள் விளாச, அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் திரட்டப்பட்டது. ரன் ரேட் 9.16
214 எனும் மிகப்பெரிய இலக்கோடு களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
27 பந்துகளில் ரிஷப் பண்ட் 78 ரன்கள் குவித்தார். இதில், 7 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 288.89. கடைசி 6 ஓவரில் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் 99 ரன்களைக் விளாசித் தள்ளியது.
ராசிக் சலாம் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி என 20 ரன்களை விளாசினார் ரிஷப் பண்ட்
பும்ரா பந்துகளையும் விட்டு வைக்காத ரிஷப் பண்ட், 18 பந்துகளில் 51 ரன்கள் விளாசி களத்தில் நிற்கிறார்.
மெக்லீகன் ஓவரில் 3 ரன்களில் கீமோ பால் கேட்ச் ஆனார். 17வது ஓவரின் முடிவில், டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, பும்ரா ஓவரில் அக்ஷர் படேல் 4 ரன்களில் வெளியேறினார்.
ஹர்திக் பாண்ட்யாவின் 16வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் விளாசினார் ரிஷப் பண்ட்
36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார்.
ஹர்திக் பாண்ட்யாவின் 14வது ஓவரில் வெறும் 2 ரன்களே எடுக்கப்பட்டது. அதில், 5 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 1 ரன் மட்டுமே எடுத்தார்.
பென் கட்டிங் ஓவரில், 47 ரன்கள் எடுத்திருந்த காலிங் இங்ரம், சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யாவின் நல்ல கேட்ச் அது என்று சொல்லலாம்!.
11.3வது ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 100 ரன்களை கடந்தது.
10 ஓவர்கள் முடிவில், டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. தவான் – இங்ரம் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 17 வயதே ஆனா ராசிக் சலாம் எனும் சிறுவனை அறிமுக வீரராக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறக்கியுள்ளது. அச்சிறுவனின் வேகமும், லைனும் கவனத்தைப் பெறுகிறது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இச்சிறுவன் ஐபிஎல்-ல் முதன் முதலாக தற்போது பங்கேற்றுள்ளார்.
ஆறு ஓவர்கள் முடிவில், டெல்லி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
அதாங்க நம்ம யுவராஜ் சிங்! யாருமே ஏலத்தில் எடுக்காத நம்ம சிங்கை மும்பை அணி, அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கே வாங்கியது. வாங்கியது மட்டுமில்லாமல், இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
வாவ்! இது கிளாஸ் சிக்ஸ். ஷ்ரேயாஸ் ஐயரிடம் இருந்து… மெக்லீகன் ஓவரில் அபாரமான சிக்ஸ் ஒன்றை அடித்து, அடுத்த பந்திலேயே பொல்லார்டின் அபாரமான கேட்சால் வெளியேறினார் ஐயர். இது நிச்சயம் டெல்லி அணிக்கு பெரிய ஏமாற்றமே!
இறுதிக் கட்டத்தில் பிரித்து மேய்ந்த ரசல்! கொல்கத்தா மிரட்டலான வெற்றி!
மெக்லீனகனின் அவுட் ஸ்விங் பந்தில், ப்ரித்வி ஷா7 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரோஹித் ஷர்மா (c), குயிண்டன் டி காக், சூர்யா குமார் யாதவ், க்ருனால் பாண்ட்யா, யுவராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பென் கட்டிங், மிட்சல் மெக்லீனகன், ராசிக் சலாம், ஜஸ்ப்ரித் பும்ரா
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர்.