MI vs DC, IPL 2024 Mumbai Indians vs Delhi Capitals LIVE Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வாங்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை நடந்த 3 போட்டிகளில் தோல்வி கன்டு துவண்டுள்ளது. தொடக்கத்தில் குஜராத்திடமும், அடுத்த ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தோற்றது. இந்த அடுத்தடுத்த தோல்விகள் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. தவிர அணிக்குள் நிலவும் சூழல் கேப்டன் பாண்டியாவுக்கு சாதகமாக இல்லை. முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடமே மீண்டும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடும் விமர்சனத்துக்கு மத்தியில் அல்லாடி வரும் கேப்டன் பாண்டியாவுக்கு ஆறுதல் தரும் விடயமாக அதிரடி வீரர் சூரியகுமாரின் வருகை அமைத்துள்ளது. கேப்டன் பாண்டியா தனது திறனை நிரூபித்து, அணி அதன் வெற்றிக்கணக்கை தொடங்கிட உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக ரசிகர்களின் முழக்கம் குறைந்து காணப்படும் சூழலில் அவர் தனது அணியின் வெற்றியை உறுதி செய்ய போராடுவார்.
மறுபுறம், காயம் காரணமாக நீண்ட கடந்த சீசனை தவற விட்ட ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடமும், அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும் தோல்வியுற்றது. ஆனால், அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையை வீழ்த்தியது. எனினும், கொல்கத்தாவுக்கு எதிராக சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் படுமோசமாக வீழ்த்தியது டெல்லி.
இந்த தோல்வி கட்டத்தில் இருந்து வெளியேற அந்த அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில், இதுவரையில் வெற்றிக் கணக்கை தொடங்காமல் இருக்கும் மும்பை உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றி பெற படுதீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மல்லுக்கட்டும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
டெல்லி Vs மும்பை நேருக்கு நேர்
ஐ.பி.எல்.லில் டெல்லியும் மும்பையும் 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி 15ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், மும்பை 18 முறை வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்
ஐ.பி.எல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே 20-வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக அடித்து விளையாடினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 6.6 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்தபோது, 27 பந்துகளில் 49 ரன்கள் அடித்திருந்த ரோஹித் சர்மா அக்சர் படேல் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
சூர்யகுமார் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே பந்தில் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 10.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்த நிலையில், அக்சர் படேல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். இவர், கலீல் அஹமது பந்தில் அக்சர் படேல் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து டிம் டேவிட் வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது, 33 பந்துகளில் 39 ரன்கள் ஹர்திக் பாண்டியா அன்ரிச் நார்ட்ஜே பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரொமரியோ ஷெபர்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
டிம் டேவிட்டும், ரொமரியோ ஷெபர்டும் சிக்சர், ஃபோர் என வானவேடிக்கை நடத்தினர்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்களும், ரொமரியோ ஷெபர்ட் 10 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங்
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.
டெல்லி கேபிடஸ் அணி 3.4 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்தபோது, 8 பந்துகளில் 10 ரன்கள் அடித்திருந்த டேவிட் வார்னர் ரொமரியோ ஷெபர்ட் பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அபிஷேக் பொரெல் பேட்டிங் செய்ய வந்தார்.
பிரித்வி ஷா மற்றும் அபிஷேக் பொரெல் அதிரடியாக விளையாடினார்கள்.
டெல்லி கேபிடஸ் அணி 11.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 40 பந்துகளில் 66 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
அபிஷேக் பொரெல் உடன் ஜோடி சேர்ந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் பேட்டிங்கில் சிக்ஸர், ஃபோர் என ருத்ர தாண்டவமாடினார்.
டெல்லி கேபிடஸ் அணி 14.6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக அடித்து வந்த அபிஷேக் பொரெல் 31 பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்த நிலையில், பும்ரா பந்தில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
ஆனால், அவர் 1 ரன் மட்டுமே எடுத்து கோட்ஸீ பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து, அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.
அக்சர் படேல் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, லலித் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
லலித் யாதவ் 3 ரன்களிலும், அடுத்து வந்த குமார் குஷக்ரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினார்கள். ஆனால், மறுமுனையில், 25 பந்துகளில் 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்திருந்த ஸ்டப்ஸ் அணியை எப்படியாவது வெற்றிக்கு அழைத்துச் செல்லலாம் என்று போராடினார். ஆனால், அதற்குள் 20 ஓவர்கள் முடிந்துவிட்டதால், அவருடைய போராட்டம் விணானது. கடைசி பந்தில், ரிச்சர்ட்சன் (2) அவுட் ஆனார்.
இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்ஹ்டில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.