MI vs DC Live score and match highlights: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 46-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களம் கண்டது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் டி காக் ஜோடியில் ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் இருந்த டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்து அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த அதிரடி வீரர் பொல்லார்டும் 6 ரன்களில் வெளியேறவே மும்பை அணி 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 87 சேர்த்து தடுமாறியது. இந்த தொடர் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த பின்னர் வந்த பாண்ட்யா சகோதரர்கள் போராடினர். இதில் 2 பவுண்டரிகளை விரட்டிய ஹர்திக் பாண்டியா 17 ரன்னில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் சேர்த்தது. சிறப்பான பந்துவீச்சை தொடக்கம் முதலே வெளிப்படுத்தி வந்த டெல்லி அணியில் அக்சர் பட்டேல் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
INNINGS BREAK!
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Excellent bowling display from @DelhiCapitals in Sharjah! 👍
3⃣ wickets each for @Avesh_6 & @akshar2026
3⃣3⃣ runs for Suryakumar Yadav
The #DelhiCapitals chase to begin soon. #VIVOIPL #MIvDC
Scorecard 👉 https://t.co/Kqs548PStW pic.twitter.com/AzglF3HuZT
தொடர்ந்து 130 ரன்கள் கொண்ட இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் முன்னணி வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித் போன்றோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் ஸ்ரேயாஸ் ஐயரருடன் ஜோடி சேர்த்து அணிக்கு வலுவான ரன் சேர்க்க போராடினார்.
22 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் பண்ட் 20 ரன் சேர்த்து இருந்த போது ஜெயந்த் யாதவ் வீசிய 8.2 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து வந்த அக்ஸர் பட்டேல் 9 ரன்னுடனும், சிம்ரான் ஹெட்மியர் 15 ரன்னுடனும் அவுட் ஆகினர்.
அணி தொடர் விக்கெட் சரிவை சந்தித்தாலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பின்னர் வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து நிதானம் காட்டிய இந்த ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதி வரை ஆட்டமிழ்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 பவுண்டரிகளை விளாசி 33 ரன்கள் சேர்த்தார். தனது பாணியில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த அஷ்வின் 20 ரன்கள் சேர்த்தார்.
RT if you B.E.L.I.E.V.E.D at 9️⃣3️⃣/6️⃣ 💙#YehHaiNayiDilli #MIvDC #IPL2021 pic.twitter.com/8qGaWV8Q82
— Delhi Capitals (@DelhiCapitals) October 2, 2021
இந்த சிறப்பான வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே- ஆப் சுற்றுக்கு செல்லும் 2ம் அணி என்பதை உறுதி செய்துள்ளது. தோல்வியை தழுவியுள்ள மும்பை அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று திடமான ரன் ரேட்டில் இருந்தால் பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.
That Winning Feeling! 👌 👌@DelhiCapitals held their nerve to beat #MI by 4⃣ wickets & registered their 9th win of the #VIVOIPL. 👏 👏 #MIvDC
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Scorecard 👉 https://t.co/Kqs548PStW pic.twitter.com/XCM9OUDxwD
Indian Premier League, 2021Sharjah Cricket Stadium, Sharjah 31 March 2023
Mumbai Indians 129/8 (20.0)
Delhi Capitals 132/6 (19.1)
Match Ended ( Day – Match 46 ) Delhi Capitals beat Mumbai Indians by 4 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil