mi vs dc mumbai indians vs delhi capitals match : மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இதற்கான டாஸ் போடப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், டெல்லியில் ரகானே, அலேக்ஸ் கேரி சேர்க்கப்பட்டார்.
தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா ஆர்ம்பமே ஏமாற்றம் தந்தார். 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரகானே 15 ரன்னில் அவுட். டெல்லி அணி 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், தவான் – கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 42 ரன் தவான் 39 பந்தில் அரை சதம் அடித்தார். ஸ்டாய்னிஸ் 13 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.
டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. தவான் 69 ரன் அலெக்ஸ் கேரி 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
இதில் ரோகித் சர்மா 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து டிகாக், சூரியகுமார் ஜோடி அபாரமாக ஆடியது. இவர்கள் தலா 53 ரன்கள் எடுத்தனர். இறுதியில் பெல்லார்டு 11, குருனால் பாண்டியா 12 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.4 ஓவரில் 166 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புள்ளிகள் அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம் பிடித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Mi vs dc mumbai indians vs delhi capitals match highlights mi vs dc review