scorecardresearch

IPL 2023 MI vs GT Highlights: ரஷித்கான் போராட்டம் வீண் : மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் 31 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

MI vs GT Live Score | Mumbai vs Gujarat Score | Mumbai Indians vs Gujarat Titans
ஐ.பி.எல். 2023: மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் லைவ் ஸ்கோர்

Mumbai Indians vs Gujarat Titans IPL 2023 Match UpdateTamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் – நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.

Indian Premier League, 2023Wankhede Stadium, Mumbai   05 June 2023

Mumbai Indians 218/5 (20.0)

vs

Gujarat Titans   191/8 (20.0)

Match Ended ( Day – Match 57 ) Mumbai Indians beat Gujarat Titans by 27 runs

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா  இஷான் கிஷன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனது. இருவரும் 6.1 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் அதிரடியை காட்டிய நிலையில், வாதரோ 7 பந்துகளில் 15 ரன்கள் குவித்து ரஷித்கான் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதன்பிநகு களமிறங்கிய விஷ்னு வினோத் சூர்யகுமார் யாதவ்க்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் மும்பை அணியின் ஸ்டோர் மளமளவென அதிகரித்த நிலையில், 20 பந்துகளில் 30 ரன்கள் குவித்த விஷ்னு வினோத் மொஹித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சூர்யகுமார் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 2018 ரன்கள் குவித்துள்ளது. கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் சதம் என்ற நிலையில் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசிய சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 49 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் 11 பவுண்டரி 6 சிக்சருடன் 103 ரன்களுடனும், கிரீன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

குஜராத் அணி தரப்பில், ரஷித் கான் 4 விக்கெட்டுகளும், மொஹித் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 219 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா – சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சஹா 2, கில் 6, ஹர்திக் பாண்டியா 4 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணிக்கு விஜய் சங்கர், மில்லர் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 14 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய மில்லர் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபினவ் மனோகர் 2 ரன்களிலும், திவாட்டியா 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் 103 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி முடிந்துவிடும் என்று மும்பை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ரஷித்கான் அல்சாரி ஜோசப் இருவரும் அணியை சரிவில் இருந்து மீண்டனர். அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் ரஷித்கான் சிக்சரும் பவுண்டரியுமாக விரட்டி மும்பை அணிக்கு அதிர்ச்சியளித்தார். 21 பந்துகளில் அரைசதம் கடந்த ரஷித்கான் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். ஆனாலும் அவரால் குஜராத் அணியின் தோல்வி விகிதத்தை மட்டுமே குறைக்க முடிந்தது.   

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 3 பெரிய சிக்சர்களை விளாசிய ரஷித்கான் 31 பந்துகளில் 3 பவுண்டரி 10 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

மும்பை அணி தரப்பில், மத்வால் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா, கார்த்திகேயா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும், பெகரிண்டஃப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Mi vs gt ipl 2023 match live score updates mumbai indians vs gujarat titans ipl match tamil commentary news