10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, MI vs GT LIVE Cricket Score
டாஸ் வென்ற குஜராத் பவுலிங் - மும்பை முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் - ரோகித் சர்மா களமிறங்கினர். அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னுக்கு அவுட் ஆனார். ரோகித் 7 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு ஜோடி அமைத்த வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் அணியின் விக்கெட் சரிவை மீட்டு எடுத்தனர். இதில் சிறப்பாக மட்டையைச் சுழற்றிய வில் ஜாக்ஸ் அரைசதம் அடித்து 53 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனிடையே, சூர்யகுமார் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். கார்பின் போஷ் மட்டும் 27 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது.
குஜராத் பேட்டிங்
தொடர்ந்து, 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட் ஆனார். இதன் பிறகு இணைந்த சுப்மன் கில் - ஜோஸ் பட்லர் ஜோடியில் பட்லர் 30 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த கேப்டன் கில் 43 ரன்னுக்கு அவுட் ஆனார். ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
இதனிடையே, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்- சுப்மன் கில் களத்தில் இருக்க, 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு குஜராத் 107 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதாவது, குஜராத் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19-வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கில் 43 ரன்கள் எடுத்து, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ்: ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேட்ச்), நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை 2 போட்டிகளிலும், குஜராத் 4 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.