Mumbai Indians vs Punjab Kings IPL 2023 Live Score in tamil:
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் ஆகியோரி அதிரடியான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், மே 3ம் தேதி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடக்கும் 46வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை பவுலிங்; பஞ்சாப் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
மும்பை அணி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர் அடித்து ராஜஸ்தானையும், பஞ்சாப் அணி கடைசி பந்தில் சென்னையையும் தோற்கடித்த உற்சாகத்தோடு சந்திக்க உள்ளன. 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள முன்னாள் சாம்பியன் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை ருசித்தால் நெருக்கடி கொஞ்சம் குறையும். அதே சமயம் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 தோல்வி) சரிசம பலத்துடன் பஞ்சாப் அணி உள்ளூரில் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
ஏற்கனவே இவ்விரு அணிகளும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 13 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. அதற்கு அவர்களது இடத்தில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் மும்பை வியூகங்களை தீட்டுகிறது. இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிபிடத்தக்கது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் , பிரபசிம்ரான் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் பிரபசிம்ரான் 9 ரன்களில் வெளியேறினார்.பின்னர் தவான் , மேத்யூ ஷார்ட் இணைந்து நிலைத்து ஆடினர். தொடர்ந்து தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் , மேத்யூ ஷார்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் , ஜிதேஷ் ஷர்மா இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். லிவிங்ஸ்டன் 32பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் மும்பை அணியின் ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்க விட்டார் .
இறுதியில் 20 ஓவர்களுக்கு 3விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து 215 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேமரோன் கிரீன் 23 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி ரன் வேகத்தை உயர்த்தியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய இஷான் கிஷன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 71 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இறுதி ஓவர்களில் ஆடிய திலக் வர்மா, 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், மற்றும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டு அசத்தினார். இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
MI vs PBKS IPL 2023 Live Score: இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் அதிரடி... மும்பை அபார வெற்றி
மொஹாலியில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.