10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs RCB LIVE Cricket Score, IPL 2025
நடப்பு தொடரில் முதல் இரண்டு போட்டிகளை அடுத்தடுத்து வென்ற பெங்களூரு அணி 3-வது ஆட்டத்தில் தோல்வியுற்றது. இருப்பினும், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற மும்பை 3-வது போட்டியில் வெற்றி பெற்று எழுச்சி கண்டது. ஆனால், மீண்டும் அடுத்த போட்டியில் அடி வாங்கியது.
இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றதால், இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போராடுவார்கள். மும்பை அதன் சொந்த மைதானத்தில் ஆடுவதால் அந்த அணி மீது அதிக இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வ செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில், தொடக்க வீரர் பில் சால்ட் 4 ரன்களில் வெளியேறினாலும் அடுத்து வந்த படிக்கல் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் விராட் கோலியும் அதிரடியாக விளையாடியதால் பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் ஆட்டமிழந்தார்.
22 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி 3 சிக்சருடன், 37 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கேப்டன் படித்தார் விராட்கோலியுடன் இணைந்து அதிரடியில் இறங்கினார். இதனால் பெங்களூர் அணி 200 ரன்களை நோக்கி நகர்ந்த நிலையில், விராட்கோலி அரைசதம் கடந்து அசத்தினார். 42 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த லியம் லிவிங்ஸ்டன் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார்.
5-வது விக்கெட்டுக்கு படித்தார் – ஜித்தேஷ் சர்மா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய கேப்டன் படித்தார் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 32 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளில், 2 பவுண்டரி 4 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
மும்பை அணி தரப்பில், போல்ட், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், விக்னேஷ் புதூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா மற்றும் ராக்கல்டன் ஆகிய இருவரும் தலா 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 18 பந்துகளில், 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவ், சற்று மந்தமாக விளையாடிய நிலையில், 26 பந்துகளில், 5 பவுண்டரியுடன் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
99 ரன்களில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா – ஹர்த்திக் பாண்டியா ஜோடி அதிரடி அட்டத்தை கையில் எடுத்தது. இதனால் மும்பை அணியின் ஸ்கோரும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் தொடர்ந்து சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து ஸ்கோரை உயர்த்திய நிலையில், 34 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து அசத்தியது.
அரை சதத்தை நெருங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன், 42 ரன்களும், அரைசதம் கடந்த திலக் வர்மா, 26 பந்துகளில் தலா 4 சிக்சர், பவுண்டரியுடன் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் கடைசி ஓவரில், மும்பை அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை வீசிய் க்ருணால் பாண்டியா, முதல் பந்தில் சாண்ட்னர், 2-வது பந்தில் தீபக் சஹார், 5-வது பந்தில் நமன் தீர் என 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 209 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 5-வது போட்டியில் விளையாடிய மும்பை அணி 4 தோல்விகளை கண்டு புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
பெங்களூர் அணி தரப்பில், க்ருணால் பாண்டிய 4 விக்கெட்டுகளும், யஷ் தயாள், ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியுடன் பெங்களூர் அணி 4 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில 3-வது இடத்தில் உள்ளது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 33 போட்டிகளில் பெங்களூரு அணி 14 போட்டிகளில் வென்றுள்ளது. மும்பை அணி 19 முறை வெற்றி பெற்றுள்ளது.