IPL 2024 | Mumbai Indians | Royal Challengers Bangalore: ஐபிஎல் - பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை அபார வெற்றிபெற்றது.
17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது
ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs RCB Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமறிங்கிய பெங்களூர் அணியில், விராட்கோலி, பாப் டூபிளசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் விராட்கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஜாக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். இதனால் பெங்களூர் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய படித்தார் பாப் டூபிளசியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் பாப் டூபிளசிஸ் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய படிதார், 26 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 50 ரன்கள் குவித்து வெளியேறினார். டூபிளசிஸ் – படிதார் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு, 82 ரன்கள் சேர்த்து அசத்தியது. அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமனையில் அரைசதம் கடந்த டூபிளசிஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த லேமரர் 0, சவுகான் 9, வைசாக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 53 ரன்கள் குவித்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கோட்சி, மத்வால், கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் – ரோகித் சர்மா இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், அதிரடியாக ஆடிய கிஷான் அரைசதம் கடந்து அசத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்த நிலையில், இஷான் கிஷான் 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.
34 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் ரோகித் சர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்த்திக் பாண்டிய களமிறங்க, அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் கடந்த சாதனை படைத்தார்.
13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 42 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், மும்பை அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“