Mumbai Indians vs Rajasthan Royals IPL 2024 Highlights: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திங்கள்கிழமை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs RR Live Score, IPL 2024
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி அதன் முதல் இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் ஐதராபாத்திடம் தோற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மறுபுறம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே லக்னோ, டெல்லி அணிகளை தோற்கடித்து இந்த சீசனை அசத்தலாக தொடங்கி இருக்கிறது.
முதல் வெற்றிக்கான தேடலில் இருக்கும் மும்பை அணி தனது சொந்த மைதானத்தில் கணக்கை தொடங்க ஆவலில் உள்ளது. அதற்கு முட்டுக்கட்டை போட்டு ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க ராஜஸ்தான் நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதிக்கொள்ளும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | நேருக்கு நேர்
ஐ.பி.ல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 15ல் மும்பையும், 12ல் ராஜஸ்தானுக்கு வென்றுள்ளன. ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே முடிவு இல்லாமல் முடிந்தது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து வந்த, நமன் திர் ட்ரெண்ட் போல்ட் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து, டெவால்ட் பிரெவிஸ் பேட்டிங் செய்ய வந்தார். வந்த வேகத்திலேயே ட்ரெண்ட் போல்ட் பந்தில் பர்கர் இடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். ஓபனிங் இறங்கி 16 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் பர்கர் பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவரை அடுத்து ஹர்திக் பாண்டியா பேட்டிங் செயய் வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 3.3 ஓவர்களில் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது. தற்போது திலக் வர்மா மற்றும் இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாகவும் நிலைத்து நின்றும் விளையாடியது.
மும்பை இந்தியன்ஸ் அணி 9.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தபோது, 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா யுஸ்வேந்திர சாஹல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, பியூஷ சாவ்லா பேட்டிங் செய்ய வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 11.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தபோது, 3 ரன்கள் எடுத்திருந்த பியூஷ் சாவ்லா, ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஹெட்மெயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுது டிம் டேவிட் பேட்டிங் செய்ய வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தபோது, 29 பந்துகளில் 32 2ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா, யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தில் அஷ்வின் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, கோட்ஸீ பேட்டிங் செய்ய வந்தார்.
டிம் டேவிட் 17 ரன்களில்ம், கோட்ஸீ 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஒவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை எடுத்தது. இதனால், 126 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் களமிறங்கினர்.
வேனா மபாக வீசிய முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் அதே ஓவரில் கடைசிப் பந்தில், டிம் டேவிட் இடம் கேட் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தபோது, 12 ரன்கள் அடித்திருந்த சஞ்சு சாம்சன், ஆகாஷ் மத்வால் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ரியான் பரக் பேட்டிங் செய்ய வந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தபோது, 13 ரன்கள் அடித்திருந்த ஜோஸ் பட்லர், ஆகாஷ் மத்வால் பந்தில், பியூஷ் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்டு அவுட் ஆனார். அடுத்து, வந்த அஷ்வின், ரியான் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது, 16 ரன்கள் அடித்திருந்த ஆகாஷ் மத்வால் பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷுபம் துபே பேட்டிங் செய்ய வந்தார்.
ரியான் பரக் மற்றும் ஷுபம் துபே இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதிரடியாக விளையாடிய ரியான் பரக் அரைசதம் அடித்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.