10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் 33வது லீக் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 4 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs SRH LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தது.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களமிறங்கினர். அதிரடியாக விளையாடி அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த இஷான் கிஷண் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், வில் ஜேக்ஸ் பந்தில் ரியான் ரிக்கெல்டன்னால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து நிதீஷ் குமார் வந்தார்.
நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் எடுத்த நிலையில், வில் ஜேக்ஸ் பந்தில் மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஹெயின்ரிச் கிளாசென் பேட்டிங் செய்ய வந்தார்.
நிதீஷ் குமார் - ஹெயின்ரிச் கிளாசென் இருவரும் நிதானமாக விளையாடினர். நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்தில் திலக் வர்மா விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனர். அடுத்து அங்கித் வர்மா வந்தார்.
அடித்து ஆடிய ஹெயின்ரிச் கிளாசென் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து, பேட் கம்மின்ஸ் வந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 163 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரயான் ரிக்கெல்டன் - ரோகித் சர்மா ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைதனர். அதிரடியாக விளையாடிய, 3 சிக்ஸர்களை விளாசிய ரோகித் சர்மா 26 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ரியான் ரிக்கெல்டன் 31 ரன்களும், வில் ஜாக்ஸ் 36 ரன்களும் சேர்த்து அவுட் ஆனார்கள். அடுத்து வந்த, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் விளாசினார். நிதானமாக ஆடிய திலக் வர்மா 21 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி, 17 ஓவர் முடிவில் வெற்றி பெற 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 18-வது ஓவரை வீசிய ஈஷான் மலிங்கா 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் நமன் திர் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து 19-வது ஓவரின் முதல் பந்தில், சீஷன் அன்சாரி வீசிய பந்தை திலக் வர்மா பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார்.
இறுதியில் 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி, எஷான் மலிங்கா,
மும்பை இந்தியன்ஸ்: ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கர்ண் சர்மா
நடப்பு தொடரில் இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் வென்றுள்ள மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், ஐதராபாத் அணி 6 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வென்ற கையுடன் களமிறங்குகின்றன.
மும்பை அணி 205 ரன்கள் எடுத்து டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேநேரத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக 246 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை 9 பந்துகள் மீதம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஐதராபாத். அந்த அணியின் டாப் ஆடர் வீரர்கள் தரமான ஃபார்மில் இருக்கும் நிலையில், 300 ரன்களை எட்டுவார்களாக என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 23 போட்டிகளில், ஐதராபாத் 10 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.