Chennai Super Kings | IPL 2024 | CSK vs RCB: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.பி.சி) அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில், சென்னை அணியில் முன்னணி வீரராக கடந்த சீசன்களில் விளையாடிய முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை வாகை சூடிய நிலையில், அது ராயுடுவுக்கு சிறப்பான பிரியாடையாக அமைந்தது.
தற்போது அம்பதி ராயுடு களமாடிய இடம் வெற்றிடமாகியுள்ள நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்ப, துபாயில் நடந்த மினி ஏலத்தில் இந்திய இளம் வீரர் சமீர் ரிஸ்வியை ரூ. 8.4 கோடிக்கு சி.எஸ்.கே அணி வாங்கியது. ரிஸ்வி கடந்த ஆண்டு உ.பி டி20 லீக்கின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த தொடரில் அவர் 10 போட்டிகளில் 50 க்கு மேல் சராசரியாக 455 ரன்களை குவித்தார். போட்டியின் போது, அவர் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார்.
மைக்கேல் ஹஸ்ஸி கருத்து
இந்த நிலையில், ஐ.பி.எல் 2024 தொடரில் அம்பதி ராயுடுவின் இடத்தை நிரப்ப சரியான வீரர் சமீர் ரிஸ்வி தான் என்றும், அவர் தான் அணியின் அடுத்த அம்பதி ராயுடு என்றும் கூறி நம்பிக்கை தெரிவித்துள்ளார் சி.எஸ்.கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "நிச்சயமாக. அவர் (சமீர் ரிஸ்வி) கண்டிப்பாக அந்த ரோலில் ஆட முடியும் என்று நான் நினைக்கிறேன். அதாவது அம்பதி ராயுடு மிகவும் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் அவர் நீண்ட காலமாக விளையாடியவர். எனவே, அவர் ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர். அதேசமயம் ரிஸ்வி தனது ஐ.பி.எல் வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறார்.
எனவே, ராயுடு பல ஆண்டுகளாக செய்து வந்ததை ரிஸ்வி சரியாக செய்வார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், நிச்சயமாக, நாம் அவரை வளர்க்கத் தொடங்கலாம், மேலும் அவருக்கு நிறைய இயல்பான திறன் உள்ளது. எனவே, இது உற்சாகமானது. அவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது,
அவர் மிடில் ஆர்டரில் எங்காவது பேட் செய்வார் என்று நினைக்கிறேன். அவர் வெளிப்படையாக பந்து வீசும் இயற்கையான ஸ்டிரைக்கர். நேற்றுதான் அவரை முதல்முறையாகப் பார்த்தேன். அவர் மிகவும் திறமையான இளம் வாய்ப்பாகத் தெரிகிறார். அதனால், நான் அவருடன் இணைந்து வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் தனிப்பட்ட முறையில் மற்றும் அவரது ஆட்டத்தை மேம்படுத்த உதவுவது, வெளிப்படையாக இந்த போட்டிக்காக, ஆனால் பல ஆண்டுகளாக முன்னேறி வருகிறது. இந்த ஐ.பி.எல்-லில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவரது வாழ்க்கையில் இன்னும் பல ஆண்டுகள் உள்ளன," என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
S̶u̶m̶m̶e̶r̶ Sameer is here! 🥳🔥
— Chennai Super Kings (@ChennaiIPL) March 16, 2024
Welcome home, Rizvi! Here's to a million yellovely moments that await us! 💛🫂#Dencoming #WhistlePodu 🦁💛 pic.twitter.com/MozL8k9ItV
20 வயதான ரிஸ்வி 2019-20 ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேசத்திற்காக ஜனவரி 2020 இல் தனது 16 வயதில் முதல் தர போட்டியில் அறிமுகமானார். 2021-22 விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக டிசம்பர் 2021 இல் லிஸ்ட் ஏ அணியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rizing 🆙 on his first day @ Anbuden 💛 #WhistlePodu 🦁 pic.twitter.com/5Xu85fZS7u
— Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.