Advertisment

Virat Kohli: "சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்" - மைக்கேல் வாகன்

Virat Kohli is a Better Player Says Michael Vaughan: சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli is a Better Player than Sachin Tendulkar

Virat Kohli is a Better Player than Sachin Tendulkar

India vs Australia, Virat Kohli is a Better Player Quoted by Michael Vaughan: சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங்கை விட சிறந்த வீரர் என்றால் அது விராட் கோலி தான் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisment

விராட் கோலியின் ரன் வேட்டையைப் பற்றி பெரிதாக நாம் எதுவும் சொல்லத் தேவையில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் அடித்து வரும் ரன்களும், படைத்து வரும் சாதனைகளும், மாடர்ன் கிரிக்கெட்டின் பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.

ஏபி டி வில்லியர்ஸுக்கு பிறகு, நடப்பு கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் விராட் கோலிக்கு சவால் அளிக்கக் கூடிய அளவிற்கு திறமையான வீரர்கள் என்றாலும், ஒன்டே, டி20, டெஸ்ட் என மூன்று வடிவிலும் கன்சிஸ்டன்சியை விடாமல் கடத்தி வருபவர்களில் கோலிக்கு முதலிடம் கொடுக்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 123 ரன்கள் குவித்தார். 75-வது டெஸ்டில் 127-வது இன்னிங்சில் அவர் தனது 25-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்டில் அதிவேகத்தில் 25-வது சதத்தை பிராட்மேனுக்கு பிறகு அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

டெண்டுல்கர் 130 இன்னிங்சிலும், கவாஸ்கர் 138 இன்னிங்சிலும், ஹெய்டன் 134 இன்னிங்சிலும் 25 சதங்களை எடுத்து இருந்தனர். பிராட்மேன் 68 இன்னிங்ஸில் இச்சாதனையை புரிந்திருந்தார்.

இந்த நிலையில், விராட் கோலியின் பேட்டிங்கை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சிலாகித்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விராட் கோலியை போன்ற சிறந்த வீரரை நான் பார்த்தது இல்லை. அதே நேரத்தில் டெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோரை நான் அவமதிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) கோலியே சிறந்த வீரர். அவரைவிட சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்தது கிடையாது.

நெருக்கடியான நேரங்களை கையாள்வதில் விராட் கோலி உயர்ந்த திறமையையும், நம்ப முடியாத மனநிலையையும் கொண்டிருக்கிறார். சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் விராட் கோலி டெஸ்டில் இதுவரை 1223 ரன் எடுத்துள்ளார். சராசரி 58.23 ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக அவரது டெஸ்ட் சராசரி கிட்டத்தட்ட 70 வரை உள்ளது. இதே காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டியில் அவரது சராசரி 94.47 ஆகும்.

மேலும் படிக்க - வார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி! இந்திய விக்கெட்டுகள் சரிவு

Sachin Tendulkar Virat Kohli Michael Vaughan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment