Michael Vaughan | IPL 2024 | Chennai Super Kings | MS Dhoni | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றில் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் கடந்த சனிக்கிழமை மோதின.
இந்த தொடரில் பிளே ஆஃப்க்கு தகுதி பெற இப்போட்டியில் சி.எஸ்.கே வெற்றி பெற்றால் போதுமானது என்றும், ஆர்.சி.பி-க்கு சி.எஸ்.கே -வை 18.1வது ஓவரில் அல்லது 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்பது போன்ற சூழல் நிலவியது. உள்ளூர் ரசிகர்களிடம் ஆதரவுடன் சொந்த மண்ணில் களமாடிய ஆர்.சி.பி அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.
219 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சி.எஸ்.கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி பிளே ஆஃப்க்கு முன்னேறியது. ஆர்.சி.பி-யின் வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், சி.எஸ்.கே-வின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதே சூழல் தான் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் மத்தியிலும் நிலவியது. இருப்பினும், போட்டி முடிந்து ஆர்.சி.பி வீரர்களுடன் கை குலுக்கிக் கொள்ள தோனி களத்திற்குள் நின்று கொண்டிருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்.சி.பி அணி வீரர்களோ, ஊழியர்களோ யாரும் தோனியுடன் கை குலுக்கிக் கொள்ளவில்லை. மாறாக அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதில் தான் குறியாக இருந்தார்கள்.
இதன் காரணமாக, தோனி கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தோனியுடன் ஆர்.சி.பி அணியினர் கை குலுக்கிக் கொள்ளாத விவகாரம் தொடர்பாக பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன், சி.எஸ்.கே மற்றும் எம்எஸ் தோனியிடம் ஆர்.சி.பி அணியினர் நடந்து கொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மைக்கேல் வாகன் பேசுகையில், "இது தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் 'லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்' என்று ஆர்.சி.பி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். தோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்.சி.பி வீரர்கள் வருந்துவார்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
This Is the Real Footage, where MS Dhoni was waiting for Handshake and RCB Team was still celebrating
— Richard Kettleborough (@RichKettle07) May 20, 2024
I know CSK fans will support MSD and RCB fans will defend RCB team
So, now you guys decide, who was right & who was wrong in this matter#RCBvsCSK pic.twitter.com/OjsGyKTDFs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.