Advertisment

'இவர் தான் அடுத்த அஸ்வின்': அறிமுக வீரரை ஒப்பிட்ட இங்கிலாந்து மாஜி கேப்டன்

வளர்ந்து வரும் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீரை பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அவர் தான் அடுத்த அஸ்வின் என்று கூறி ஒப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Michael Vaughan compares England rookie Shoaib Bashir to Indian stars pinner R Ashwin

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England, 5th Test, Dharamsala |  Ravichandran Ashwin: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. 

Advertisment

இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 507 விக்கெட்டுகளை வெற்றிகரமாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், வளர்ந்து வரும் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீரை பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அவர் தான் அடுத்த அஸ்வின் என்று கூறி ஒப்பிட்டுள்ளார்.  

கிளப் ப்ரேரி ஃபயர் யூடியூப் சேனலில் பேசிய மைக்கேல் வாகன், “இங்கிலாந்து அணிக்கு இது சிறந்த வாரங்களில் ஒன்று. நாங்கள் கண்டுபிடித்த மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சூப்பர் ஸ்டார் சோயப் பஷீரை கொண்டாடுகிறோம். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலே, அவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தான் புதிய ரவி அஸ்வின், அவரை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். எனவே, நாங்கள் இங்கிலாந்து கிரிக்கெட்டில் அந்த புதிய சூப்பர் ஸ்டாரைக் கொண்டாடுகிறோம்,” என்று அவர் கூறியுள்ளார். 

இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் சோயப் பஷீர் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால், ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை. தொடர்ந்து ராஞ்சியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் சோயப் பஷீர் களமிறப்பட்டார். இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்தை சுழல விட்ட அவர், முதல் இன்னிங்சில் 119 ரன்களுக்கு 5 விக்கெட்டையும், 2வது இன்னிங்சில் 79 ரன்களுக்கு 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். 

வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடிய சோயப் பஷீர் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் தான் அவரை இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் என்று பாராட்டியும், 'புதிய' அஸ்வின்' என்று அஸ்வினுடன் ஒப்பிட்டும் பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG: ‘He’s the new R Ashwin’ – Michael Vaughan raves about Shoaib Bashir

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment