Ms Dhoni | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 51 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இருப்பினும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்கள் எடுத்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தனது ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு ஏற்கனவே வின்டேஜ் தோனியாக களமாடி வரும் தோனி, பேட்டிங்கிலும் 'வின்டேஜ் தோனி' உணர்ச்சி கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தில் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
Vintage Dhoni 👌#TATAIPL fans were treated to some strong hitting by MS Dhoni
— IndianPremierLeague (@IPL) March 31, 2024
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#DCvCSK | @ChennaiIPL pic.twitter.com/eF4JsOwmsa
உண்மையாகிய ஹஸ்ஸியின் கணிப்பு
இந்நிலையில், தோனி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இப்படி கடைசி ஓவரில் பேட்டிங் செய்வார் என்றும், அவர் சிக்சருடன் ஆட்டத்தை முடிப்பார் என்றும் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கணித்திருந்தார். தற்போது அவரது கணிப்பு உண்மையாகி இருக்கிறது.
“போட்டியின் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்வார் என்பது எனது கணிப்பு. அப்போது ரசிகர்கள் கூட்டம் ஆரவாரம் செய்யும். தோனி சிக்ஸரை அடித்து ஆட்டத்தை முடிப்பார்” என்று மைக்கேல் ஹஸ்ஸி ஐ.பி.எல்-லின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறியிருந்தார்.
Delhi Capitals 🆚 Chennai Super Kings
— IndianPremierLeague (@IPL) March 31, 2024
𝙋𝙧𝙚-𝙢𝙖𝙩𝙘𝙝 𝙋𝙪𝙡𝙨𝙚, brought to you by the legendary duo of Ricky Ponting & Michael Hussey 👌 👌 - By @28anand #TATAIPL | #DCvCSK | @DelhiCapitals | @ChennaiIPL | @RickyPonting | @mhussey393 pic.twitter.com/GSdeUO5Mzi
இந்த வார தொடக்கத்தில் சென்னையில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு பேசிய மைக்கேல் ஹஸ்ஸி, “எம்.எஸ். தோனி கடைசி ஓவர்களில் வந்து சில பந்துகளை எப்போதும் போல் அதிரடியாக விளையாவார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் சமீர் ரிஸ்வி சுழலுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என்பதால், அவரை பேட்டிங் செய்ய அனுப்பினர். அவரும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார், இது அவரது நம்பிக்கைக்கு சிறந்ததாக இருந்தது.
இம்பாக்ட் பிளேயர் விதி உள்ளதால், நாங்கள் அடிப்படையாகவே ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் மற்றும் கூடுதல் பந்துவீச்சாளர்களை ஆட்டம் முழுவதும் பெற்றுள்ளோம். அதனால் பேட்டிங் ஆர்டர் நீண்டு கொண்டே செல்கிறது. எம்.எஸ். தோனி 8வது இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன். இப்போதைய நாட்களில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார்" என்று கூறியிருந்தார்.
2018 மற்றும் 2019 சீசனில் 400 ரன்களை எட்டிய தோனி, அதன்பின்னர் எந்த சீசனிலும் 250 ரன்களைக் கடக்க முடியவில்லை. அத்துடன் அதிகம் லோ-ஆடரில் தான் பேட்டிங் செய்தார். கடந்த சீசனில், அணியை 5வது சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற தோனி 104 ரன்கள் எடுத்தார். ஒரே போட்டியில் அவர் 32* ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.