முதன்முறையாக இந்தியாவிற்கு வரும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்!

எங்களுக்கு ஒரு பிரபலமான முகம் தேவைப்பட்டது.

குத்துச்சண்டை ஜாம்பவான் என்று உலக ரசிகர்களால் அழைக்கப்படும் மைக் டைசன் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

உலக சாம்பியன் மைக் டைசன் :

முன்னாள் குத்து சண்டை வீரரான மைக் டைசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

களத்தில் இவரைக் கண்டு அஞ்சாத எதிரிகளே இல்லை. இவரை ரோல் மாடலாக கொண்டு குத்து சண்டையில் இந்திய வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர். பார்வையிலியே எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கும் அசாத்திய வீரர் டைசன் முதன்முறையாக மும்பைக்கு வருகை தருகிறார்.

 மைக் டைசன்

உலக சாம்பியன் மைக் டைசன்

இந்திய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பாலும், உலக கிக்பாக்சிங் கூட்டமைப்பாலும் ஆதரிக்கப்பட்ட லீக் தொடர் மும்பையில் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை வைப்பதற்காக மைக் டைசன் முதன்முறையாக இந்தியா வருகிறார்.

ஆனால் இந்த தொடரில் டைசன் பங்கேற்று விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறியிருப்பது, “ தற்காப்புக் கலை இப்போது ஒரு விளையாட்டாக மாறியுள்ளது. இதில் இன்னும் பிரபலமானவர்கள் வரவில்லை. எங்களுக்கு ஒரு பிரபலமான முகம் தேவைப்பட்டது. சண்டைக் கலையில் முகம்மது அலிக்கு பின், மைக் டைசன் தான் சிறந்த வீரர். அதனால், அவரை அழைத்து வந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

டைசனின் வருகையை பற்றி அறிந்த தீவிர ரசிகர்கள் அவரின் வருகையை கொண்டாட துவக்கி விட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close