ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவாக இருக்கிறது. அதுவே தங்கப் பதக்கமாக இருந்தால், வாழ்நாள் முழுதும் அந்த தருணத்தை எண்ணி திளைத்து மகிழலாம். துரதிருஷ்டவசமாக, ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும், 3 (சில நிகழ்வுகளில் 4), விளையாட்டு வீரர்கள் தான் பதக்கம் வெல்கிறார்கள். பதக்கத்தை தவற விடுபவர்கள் வேதனைக் கனலில் வாடுகிறார்கள். அதனை ஊக்கமாக எடுத்துக்கொள்பவர்கள் அடுத்த ஒலிம்பிக்பில் போட்டி போடுகிறார்கள்.
அவ்வகையில், பல இந்திய விளையாட்டு வீரர்களும், அந்த உணர்வை அனுபவித்திருக்கிறார்கள், வெற்றிபெறுவதற்கு மிக அருகில் வந்து பதக்கத்தை தவற விட்டுள்ளார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா 10 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 8 தங்கப் பதக்கங்களை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வென்றது. மீதமுள்ள இரண்டை அபினவ் பிந்த்ரா (2010) மற்றும் நீரஜ் சோப்ரா (2020) ஆகியோர் வென்றனர்
இருப்பினும், ஒலிம்பிக்கில் இன்னும் பல இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கம் வெல்லும் நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான்காவது இடத்துடன் நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், அப்படி வெற்றிபெறுவதற்கு மிக அருகில் வந்து பதக்கத்தை தவறவிட்ட முதல் 5 இந்திய விளையாட்டு வீரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. மில்கா சிங் (1960 ரோம் ஒலிம்பிக்)
பழம்பெரும் இந்திய ஸ்ப்ரிண்டரான மில்கா சிங், இந்தியாவின் ஆரம்பகால விளையாட்டு சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்ந்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை மில்கா சிங் பெற்றுத் தந்தார். ஆனால், ரோம் ஒலிம்பிக் அவருக்கு பெரும் வேதனையில் முடிந்தது.
'பறக்கும் சீக்கியர்' என அன்புடன் அழைக்கப்பட்ட மில்கா சிங், 1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் களமிறங்கினார். ஆனால் அவர் 250 மீட்டருக்கு அருகில் வருகையில் மர்மமான முறையில் மெதுவாக ஓடினார். அதனால், அவரை ஓடிஸ் டேவிஸ் மற்றும் கார்ல் காஃப்மேன் ஆகியோர் முந்தினர்.
மில்கா சிங் மற்றும் மால்கம் ஸ்பென்ஸ் ஆகிய இருவரும் நெக்-டு-நெக் ஃபினிஷிங் செய்திருந்தனர். இறுதியில், 0.1 வினாடிகளில் மில்கா சிங் தக்கத்தை தவறவிட்டார்.
மில்கா சிங் வாழ்க்கை வரலாறு 'பாக் மில்கா பாக்' (Bhaag Milkha Bhaag) எனும் பெயரில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. பி.டி உஷா (1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ்)
தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இருக்கும் மற்றொரு உலகளாவிய தடகள பிரபலம் ஆவார். கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் வேகமாக ஓடுவதை பார்க்கும் பெரியவர்கள், 'பி.டி உஷா மாதிரி ஓடுகிறார்' என்று கிண்டலாக கூறுவார்கள். அந்த அளவுக்கு தனது அபாரமான் வேகத்திற்கு பெயர் பெற்றவர் தான் பி.டி உஷா. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையும் அவர் ஆசிய சாதனை படைத்து அசத்தி இருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/374fa6d6-c3e.jpg)
400 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் பி.டி.உஷா மொராக்கோவின் நவல் எல் மௌடவாகல் மற்றும் அமெரிக்காவின் ஜூடி பிரவுன் ஆகியோருக்கு பின்னால் வந்துகொண்டிருந்தார். அதாவது அவர் ருமேனியாவின் கிறிஸ்டியானா கோஜோகாருவுடன் வெண்கலத்திற்காக போராடினார். அப்போது இருவரும் நொடி இடைவெளியில் முடித்தனர். பி.டி உஷா 0.01 வினாடிகளில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
3. தீபா கர்மாகர் - 2016 ரியோ ஒலிம்பிக்
/indian-express-tamil/media/post_attachments/af12094b-27c.jpg)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், நாட்டிற்காக பதக்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற தீபா கர்மாகர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 14.833 புள்ளிகளுடன் வால்ட் நிகழ்வில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் பதக்கம் வெல்வார் என அதிக நம்பிக்கை இருந்த நிலையில், இறுதிப்போட்டியில் உத்வேகம் தரும் நிகழ்ச்சி இருந்தபோதிலும், கர்மாகர் 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.
4. அபினவ் பிந்த்ரா - 2016 ரியோ ஒலிம்பிக்
/indian-express-tamil/media/post_attachments/adf8e083-c39.jpg)
2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் தனிநபர் விளையாட்டு வீரர் என்கிற பெருமையை அபினவ் பிந்த்ரா பெற்றார். தனது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை ரியோவில் வெல்வதற்கு அருகில் வந்தார். ஆரம்ப சுற்றில், பிந்த்ரா ஏழாவது இடத்தைப் பிடித்து தனது இடத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், இறுதிச் சுற்றில் வியத்தகு முறையில் தோற்று, இறுதியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
5. அதிதி அசோக் - 2020 டோக்கியோ ஒலிம்பிக்
தொழில்முறை கோல்ஃப் சர்க்யூட்
தரவரிசையில் 200-வது இடத்தில் இருந்தாலும், இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய கோல்ப் வீராங்கனை என்கிற பெருமையை அதிதி அசோக் பெற்றார். அவர் தொடர்ந்து பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு நிகழ்வில் பதக்க இடங்கள் மத்தியில் இருந்தார். எனினும், சுற்று 4-க்குப் பிறகு விஷயங்கள் மோசமாக மாறியது.
நியூசிலாந்தின் லிடியா கோ மற்றும் ஜப்பானின் இனாமி மோனின் தாமதமான தள்ளாட்டத்தால் அதிதியை முந்தினர். இதனால், அவர் நான்காவது இடத்தைத் தான் பிடித்தார்.
2016ல் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா இணை, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இணை, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தீபக் புனியா உள்ளிட்டோர் வெண்கலப் பதக்கத்தை இழந்து நான்காவது இடத்தைப் பிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“