scorecardresearch

சீன வீராங்கனையை தட்டித் தூக்கிய மீராபாய் சானு…. வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்!

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில், 200 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

Mirabai Chanu wins WC silver; takes down Chinese Olympic champion Tamil News
Mirabai Chanu reacts after winning the silver medal.

News about Mirabai Chanu, silver medal and World Championship in tamil: 2022 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கொலம்பியாவின் பொகோடாவில் நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு களமாடி இருந்தார். தனது முழுத் திறனையும் வெளிப்படுத்திய அவர் மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும், மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில் 200 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார். அதோடு, அவர் சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, (206 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு முத்தமிட்டுள்ள இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்று அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Mirabai chanu wins wc silver takes down chinese olympic champion tamil news

Best of Express