ஜப்பானில் நடைபெற்று வருகிறது ஒலிம்பிக் போட்டிகள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Advertisment
இந்தியாவில் இருந்து சென்ற வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பளுத்தூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை துவங்கி வைத்துள்ளார்.
கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு பளுதூக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆவார். 2000ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் கர்ணம் மல்லேஸ்வரி பதக்கம் வென்றார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து தற்போது இவர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 2016ம் ஆண்டு போட்டியிட்ட மீராபாய் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் பளி தூக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். சீனாவின் ஜிஹூய் ஹௌ தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியாவின் கண்டிகா ஆய்ஷா வெண்கல பதக்கம் வென்றார். 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஸ்னாட்ச் பிரிவில் 82 கிலோ பளுவை ஒரு முறை மட்டுமே தூக்கினார் மீராபாய். க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் ஒரு முறை கூட பளுவை தூக்கவில்லை. இந்த போட்டிகளுக்கு பிறகு விளையாட்டுத்துறையில் இருந்து விடை பெற விரும்பியதாக மீராபாயின் தாய் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil