Advertisment

'கொஞ்சமாவது மரியாதை கொடுங்க': உலகக் கோப்பை மீது கால்களை வைத்த மிட்செல் மார்ஷ் மீது தாக்கு!

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையை கீழே வைத்து, அதன் மீது கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் தொடர்பாக ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Mitchell Marsh Feet On World Cup Trophy Netizens Slams IND vs AUS CWC 2023 Final Tamil News

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையை கீழே வைத்து, அதன் மீது கால் மேல் கால் போட்டு, தெனாவட்டாக அமர்ந்திருப்பது போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

worldcup 2023 | india-vs-australia | Mitchell Marsh: 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

Advertisment

241 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

மிட்செல் மார்ஷ் மீது தாக்கு 

இந்நிலையில், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையை கீழே வைத்து, அதன் மீது கால் மேல் கால் போட்டு, தெனாவட்டாக அமர்ந்திருப்பது போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியதை, ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும், அவரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள். 

கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு கனவாக இருக்கும் உலக கோப்பையை மதிக்காமல், கால் வைத்து அவமரியாதை செய்ததாக மிட்செல் மார்ஷுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஆஸ்திரேலியா, அந்த விளையாட்டின் மூலம் பெரும் உயரிய கோப்பை மற்றும் பட்டத்தை பெற்றும், அதற்கு மதிப்பளிக்காமல் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 

“அன்புள்ள ஐசிசி, பிசிசிஐ மிட்ச் மார்ஷ் உலகக் கோப்பை கோப்பையை அவரது காலடியில் வைப்பது குறித்து கவலை தெரிவிக்கிறேன். இந்த நடத்தை விளையாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அவமரியாதையாக தெரிகிறது. தயவு செய்து இந்த விஷயத்தை சரியான முறையில் மதிப்பாய்வு செய்யவும்," என்று ஒரு பயனர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

"நண்பா இது உலகக் கோப்பை மரியாதை" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். “சகோ, உலகக் கோப்பை கோப்பைக்கு கொஞ்சம் மரியாதை காட்டுங்கள். இந்த கோப்பையின் மதிப்பு குறித்து இந்திய ரசிகர்கள் அல்லது இந்திய அணியிடம் கேளுங்கள்” என்று மற்றொருவர் கூறினார். “ தயவு செய்து உலகக் கோப்பை டிராபிக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்” என்று மூன்றாவதாக ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Worldcup Mitchell Marsh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment