சிஎஸ்கே-வில் இவர் மதிப்பு 50 லட்சமே… ஆனால் உலக சாம்பியன் இங்கிலாந்தை எப்படி கதறவிட்டார் பாருங்க (வீடியோ)

மிட்சல் சான்ட்னரின் மிரட்டலான ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸால் நியூசிலாந்து பிரம்மாண்டமான வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக பதிவு செய்துள்ளது. நியூஸி.,யின் மவுன்ட் மாங்கனுயில் நடந்த நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க,…

By: November 25, 2019, 12:06:09 PM

மிட்சல் சான்ட்னரின் மிரட்டலான ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸால் நியூசிலாந்து பிரம்மாண்டமான வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக பதிவு செய்துள்ளது.

நியூஸி.,யின் மவுன்ட் மாங்கனுயில் நடந்த நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 127-4 என்று தடுமாறியது.

ஆனால், அதன்பிறகு வாட்லிங் 205 ரன்களும், மிட்சல் சான்ட்னர் 126 ரன்களும் எடுக்க, அந்த அணி 615 ரன்கள் குவித்தது.

127-4 ளிலிருந்து 615 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பவுலர்களை கதறவிட்டது நியூஸிலாந்து.

நியூசிலாந்தின் 6,7, 8 ஆகிய மூன்று விக்கெட்டுகள் மட்டும் எடுத்த ரன்கள் 205+65+126 = 396.

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து, வெறும் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து ஓப்பனர்கள் பர்ன்ஸ், சிப்ளே ஆகியோரை காலி செய்த சான்ட்னர், ஜாக் லீச்சை ௦ ரன்களில் வெளியேற்றி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தவிர, 6 ரன்கள் எடுத்திருந்த ஓலி போப் பவுண்டரி அடிக்க டிரைவ் செய்த போது, ஷாட் கவர் பாயிண்ட்டில் நின்றிருந்த சான்ட்னர், அந்தரத்தில் டைவ் அடித்தது பிடித்த கேட்ச் தான் ஒட்டுமொத்த போட்டியின் ஹைலைட்டாக அமைந்தது.

இறுதியில், நியூஸி., இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்து வெற்றிப் பெற்றது.

3 விக்கெட், சதம், அசத்தல் கேட்ச் என்று ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் காட்டிய  சான்ட்னருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஐபிஎல்-ல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் மிட்சல் சான்ட்னர். 2020 சீசனுக்கு இவர் அணியில் தக்க வைக்கப்பட கொடுக்கவுள்ள தொகை ரூ.50 லட்சம்.

கேதர் ஜாதவ் தக்க வைக்கப்பட்ட தொகை – 7.8 கோடி.

கலி காலம்!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Mitchell santner catch vs england video nz vs eng test match

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X