Advertisment

16 பந்தில் அரை சதம்… 35 வயது மொயின் அலியை சி.எஸ்.கே கொண்டாடுவது இதனால் தான்!

England all-rounder Moeen Ali  Scores Fastest T20I Fifty In Just 16 Balls Tamil News: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி 16 பந்துகளில் அதிவேக அரைசதத்தை அடித்து மிரட்டியுள்ளார்.

author-image
WebDesk
Jul 29, 2022 11:24 IST
Moeen Ali Scores Fastest T20I Fifty In Just 16 Balls; CSK fans celebrating

England all-rounder Moeen Ali 

Moeen Ali  Tamil News: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டி-20 போட்டி பிரிஸ்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ 90 ரன்களும் (53 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்), மொயீன் அலி 52 ரன்களும் (18 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

Advertisment

தொடர்ந்து 235 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 72 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றது.

16 பந்தில் அரை சதம்… மிரட்டி எடுத்த மொயீன் அலி...

publive-image

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தரப்பில் களமாடிய மொயீன் அலி 16 பந்துகளில் அரைசதத்தை அடித்து மிரட்டினார். அவரின் இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம், இங்கிலாந்து வீரர்களில் அதிவேக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும், சர்வேதே கிரிக்கெட்டில் 6வது வீரர் என்கிற சாதனையும் படைத்துள்ளார்.

"இந்த அட்டவணையில் சேர்வதற்கு இது ஒரு நல்ல நேரம். வலது-இடது காம்போவைப் பராமரிக்க நான் இடது கை வீரராக விளையாட்டில் நுழைந்தேன். இந்த ஆடுகளத்தில், சிக்ஸர்கள் அடிப்பது கடினம். ஸ்பின்னர்களுக்கு எதிராக, நான் பின்னால் சாய்ந்து ஆடினேன். ஜானி நம்பமுடியாத திறன் மற்றும் வலிமை கொண்டவர். ஒரு அணியாக நாங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறோம். இந்த விக்கெட் சிறப்பாக உள்ளது. நான் எனது ஃபார்மைத் தக்க வைத்துக் கொண்டு அதை தொடர முயற்சிக்கிறேன்” என்று ஆட்டத்திற்குப் பிறகு மொயீன் அலி கூறினார்.

இப்படியொரு சாதனை மொயீன் அலி தனது 35 வது வயதில் படைத்துள்ள நிலையில், அவருக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் அவருக்கு தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

publive-image

இதற்கிடையில், 16 பந்துகளில் அரைசதத்தை அடித்த அதிரடி வீரர் மொயீன் அலியின் வீடியோவை சென்னை அணி அதன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. தற்போது கிரிக்கெட் ராசரிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

அதிவேக அரைசதம்… முதலிடத்தில் இந்திய வீரர்…

publive-image

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல்-ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங் உள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு டர்பனில் நடந்த டி-20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார். மேலும், ஸ்டூவர்ட் பிராட் ஓவரை பதம் பார்த்த யுவி, ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து நொறுக்கி புதிய சாதனையும் படைத்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Cricket #Sports #Chennai #England #England Cricket Team #Chennai Super Kings #Moeen Ali #Ipl Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment